மனைவி என்னை கிட்டவே விடல! திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆச்சு… விபரீத முடிவு எடுத்த கணவன்

குற்றம்

இந்தியாவில் திருமணம் முடிந்து 22 மாதங்கள் ஆன நிலையில், மனைவி உடல்ரீதியாக நெருங்கவே விடாததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரசிங். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு தன்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்று விட்டு, 2018-ஆம் ஆண்டு கீதா ஜெயந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கீதா ஜெயந்தி ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்தானவர்.

இந்நிலையில், இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 22 மாதங்கள் கடந்த நிலையில், கீதா கணவரான சுரேந்திர சிங்கை உடல் ரீதியாக நெருங்கவிடாமல் வைத்துள்ளார்.

இதனால் கடும் மன அழுத்ததில் இருந்த சுரேந்திர சிங், கடந்த ஜுலை மாதம் 27-ஆம் திகதி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சுரேந்திர சிங் குறித்து அவரின் தாயார் கூறுகையில், இந்த தம்பதியினர் ஒரே அறையில் வெவ்வேறு படுக்கைகளில் தூங்கினர்.

திருமணமாகி 22 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், கீதா எனது மகனை உடல் ரீதியாக நெருங்கவிடவில்லை. கீதா தனது கணவருடன் ஒருபோதும் தூங்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

மனைவி, தன்னுடன் நெருக்காமாக இருக்க மறுத்ததால், மகன் மிகுந்த மன அழுத்ததில் இருந்தான். நாட்கள் செல்ல செல்ல, இந்த ஜோடிக்கிடையே பிரச்சனை பெரிதாகிக் கொண்டே சென்றது.

இதனால் கீதா வீட்டை விட்டு வெளியேறி பெற்றோரின் வீட்டிற்கு சென்றதால், நிலைமை இன்னும் மோசமானது. அதன் பின்னரே என்னுடைய மகன் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டான் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மகனின் தற்கொலைக்கு காரணம் கீதா தான், அவள் தான் என் மகளை தற்கொலைக்கு தூண்டினார் என்று கூறி, கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி சுரேந்திரசிங்கின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *