மனைவியின் குழந்தையை தன் கருவில் சுமக்கும் கணவன். தற்போது 8 மாதங்கள். இதோ புகைப்படங்கள்…!!

வியப்பு

தனது குழந்தையை வயிற்றில் சுமக்கும் கணவனின் வயிற்றில் முத்தமிடும் மனைவியின் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. வெளிநாடு ஒன்றில் வசித்து வருபவர் Esteban Landrau இவரது மனைவி Danna Sultana , இருவரும் திருமணம் முடித்து 2 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தனியாக வசித்து வருகின்றனர்.

இதில் Esteban Landrau தற்போது கர்பமாக இருக்கிறார். இது எப்படி சாத்தியம் ? இது பற்றி தெரிவித்துள்ள Esteban Landrau நான் இயற்கையில் பெண்ணாக பிறந்தேன், ஆனால் எனக்கு பெண்ணாக வாழ விருப்பம் இல்லை அதனால் ஆணாக மாறினேன், நடை, உடை பாவனைகளை மாத்திவிட்டேன், அதே போல் Danna Sultana இயற்கையில் ஆணாக பிறந்தாள், அவளுக்கு ஆணாக வாழ விருப்பம் அதனால் பெண்ணாக மாறிவிட்டாள்.

என்ன தான் நாங்கள் மாறினாலும் எமது உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவில்லை. இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்ததன் பயன் தான் நான் கர்ப்பமாக உள்ளேன், என் மனைவி எல்லா விதத்திலும் எனக்கு உதவியாக இருக்கிறாள், கர்ப்பமாக இருக்கும் நாட்களில் தாய்மையை உணர்கிறேன், இந்த உணர்வு மகிழ்ச்சியை தருகிறது.

அடிக்கடி வயிறு வலி ஏற்படுகிறது. மருத்துவர்கள் இது சாதாரண வலி என்கின்றனர். குழந்தையை நல்ல முறையில் பெற்று எடுப்பதே என் ஆசை என தெரிவித்துள்ளார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *