மச்ச இரகசியம்!! அறிந்துகொள்ளுங்கள்!1 அடிவயிற்றில் மச்சம் இருக்கா? அப்ப ராஜயோகம் பாஸ்!

அழகுக் குறிப்புகள்

பெண்களுக்கு மார்பகத்தில் சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள். அதே நேரத்தில் கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது. அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது மச்சக்காரன்டா என்று கூறுவார்கள்.

மச்சங்கள் சொல்வதென்ன

மனிதர்களுக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். மச்சங்கள் மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.

நெற்றியில் மச்சம்

நெற்றி நடுவே மச்சம் இருந்தால் புகழ், பதவி அந்தஸ்து தேடி வரும். நெற்றியின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் தைரியம், கர்வமாக இருப்பார்களாம். நெற்றியின் இடது புறம் இருந்தால் டென்சன் பார்ட்டியாம். முனுக்கென்று கோபம் வருமாம்.

மூக்கில் மச்சம்

மூக்கின் மேல் மச்சம் இருந்தால் பொறுமை சாலியாம். மூக்கின் நுனியில் இருந்தால் வசதியான வாழ்க்கை திடீர் ஏற்றங்கள் கிடைக்குமாம். மேல் வாய் பகுதியில் மச்சம் இருந்தால் அமைதி,அன்பான கணவர் கிடைப்பார்களாம்.
மேல் உதடு, கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் உயர்ந்த கணம் கிடைக்குமாம்.

கன்னத்தில் மச்சம்

Sponsored Content

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசீகரமானவர். வலது கண்ணத்தில் மச்சம் இருந்தால் படபடப்பானவர். நாக்கில் மச்சம் இருந்தால் சொன்னது பலிக்குமாம். கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும்.

தொப்புளில் மச்சம்

தொப்புளுக்கு மேல் மச்சம் இருந்தால் யோகமான வாழ்க்கை அமையுமாம். தொப்புளுக்கு கீழ் இருந்தால் பொருள் நஷ்டம் ஏற்படுமாம். தொப்புளில் மச்சம் இருந்தால் ஆடம்பரமாக வாழ்வாராம்.

அடிவயிற்றில் மச்சம்

வயிற்றில் மச்சம் இருந்தால் நல்ல குணங்கள் கொண்டவர். நிறைவான வாழ்க்கை வாழ்பவர். அடிவயிற்றில் மச்சம் இருந்தால் ராஜயோக அம்சம் கொண்டவர். உயர்பதவிகள் தேடி வருமாம்.

தொடையில் மச்சம்

இடது தொடையில் மச்சம் இருந்தால் ஏற்ற இறக்கம் கொண்டிருக்குமாம். வலது தொடையில் மச்சம் இருந்தால் ஆணவக்காரியாம். தற்பெருமை கொண்டவராம். புட்டத்தில் மச்சம் இருந்தால் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டவராம். சுகபோக வாழ்க்கை வாழ்பவராம்.

இடது முழங்காலில் மச்சம்

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை செல்வர். இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர். பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *