மசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil )

ஆரோக்கிய சமையல்

மசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு தேவையான பொருட்கள் ( Ingredients to make Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil )

 • 12-15 பேபி உருளைக்கிழங்கு
 • 1 மற்றும 1/2 கப் தயிர்
 • 3 தேக்கரண்டி எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
 • ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள்
 • சுவைக்கேற்ற உப்பு
 • தண்ணீர்
 • 1/2 இன்ச் சுக்கு
 • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 • 1 தேக்கரண்டி மல்லி
 • 1 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 4 கிராம்பு
 • 2 கருப்பு ஏலக்காய்
 • 4 கஸ்தூரி சிவப்பு மிளகாய்

மசாலா மற்றும் தயிரில் பேபி உருளைக்கிழங்கு உடன் தம் உருளைக்கிழங்கு செய்வது எப்படி | How to make Baby Potatoes in Spices & Yogurt aka Dum Aloo in Tamil

 1. பேபி உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி அரைவேக்காடிற்கு வேகவைத்து ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது கடாயில் தண்ணீரோடு வேகவைக்கவும்.
 2. அரைவேக்காட்டு உருளைக்கிழங்கை குளிர்ந்த நீர் நிரப்பிய வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும்.
 3. உருளைக்கிழங்கின் தோலை உரித்து ஒரு முள் கரண்டியால் ஒவ்வொரு உருளைக்கிழங்கையும் குத்தவும்.
 4. ஒரு கடாயைச் சூடுபடத்தி மல்லி, சீரகம், கருப்பு ஏலக்காய், மிளகு, பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உயர் தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும்.
 5. வறுத்தப் பொருள்கள் அனைத்தையும் கிராம்பு, ஏலக்காய், சக்குடன் அரைத்துக்கொள்ளவும்.
 6. கிட்டத்தட்ட 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு தட்டையான கடாயில் ஊற்றி உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக அல்லது சிறப்பான முறுமுறுப்புக்காக பொரித்து வைத்துக்கொள்ளவும்.
 7. உருளைக்கிழங்கை எடுத்து டிஷ்யூ பேப்பரில் வடிக்கட்டவும்.
 8. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி பெருங்காயத்தை அதனுள் போடவும்.
 9. அரைத்த மசாலாவில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி, இதை கடாயில் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.
 10. தயிரை நன்றாக அடித்து கடாயில் சேர்க்கவும்.
 11. சர்க்கரை சேர்த்து (விரும்பினால்) பேபி உருளைக்கிழங்கை கடாயில் பொரிக்கவும். மூடியிட்டு மூடி சிம்மில் அது 10-15 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வைக்கவும். உப்பு சேர்க்கவும்.
 12. குழம்பு அடர்த்தியாகும்வரையும் எண்ணெய் கடாயில் மிதக்கும்வரையிலும் வேகவைக்கவும். இந்த நிலையில் சூடான கிரிட்டின் மீது வைத்து குழம்பை தம்மில் வைக்கவும்.
 13. கடாயை ஒரு மூடியால் மூடி சூடான கிரிட்டில் வைத்து சிறு தீயில் 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
 14. அடுப்பை நிறுத்திவிட்டு தம் ஆலு குழம்பை சாதத்துடனோ இந்திய தட்டை பிரெட்டுடனோ பரிமாறுக.

எனது டிப்:

கடுகு எண்ணெய் அல்லது மணிலா எண்ணெய் சிறந்த விளைவைத் தரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *