‘ப்ளீஸ் எனக்கு கல்யாணம் இருக்கு’… ஒன்னல்ல ரெண்டல்ல… ஆசாமியின் காம வேட்டை…

சினிமா

இணையத்தின் சமகால வளர்ச்சியை தவறுதலாக பயன்படுத்தி அறிமுகம் இல்லாத பெண்களிடம் பாலியல் முறையில் அணுகினால் என்ன விளைவு நேரிடும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய செல்போன் எண்ணிற்கு புதிய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆரம்பத்தில் ஹெலோ என்று ஆரம்பித்த அந்த செய்திக்கு மாணவி எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். அதனையடுத்து காதல் குறுஞ்செய்திகளும், ஆபாச ஜோக்குகளும் வந்தது. இதனால் கடுப்பான மாணவி, அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது ஆண் ஒருவர் எடுத்துள்ளார்.

பின்னர் அவரிடம் பேசிய மாணவி ‘ எனக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் ஆகவுள்ளது. ஆகையால் எனக்கு இதுபோல மெசேஜ்களை அனுப்ப வேண்டாம் என தொய்வான குரலில் கூறினார். பின்னர் குறுஞ்செய்தியை நிறுத்திக்கொண்டு நபர், மாணவியின் வாட்சப்க்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான மாணவி இதுகுறித்து தனது குடும்பத்துக்கு தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அவர்கள் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு மாணவி கொடுத்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரித்ததில், அந்த நபர் நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் எண் என்று தெரிந்தது. பின்னர் தேடுதல் வேட்டையையில் இறங்கிய போலீசார், குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரில் வசித்து வந்த வினோத்தை கைது செய்தனர்.

பின்னர் மாணவிக்கு கொடுத்த ஆபாச தொல்லையை குறித்து போலீசார் அவரிடம் விசாரித்ததில் ” ட்ரூ காலர் செயலில் குத்துமதிப்பாக பத்து எண்களை பதிவிட்டு அந்த எண்ணில் பெண்கள் பெயர் வந்தால் அதை சேமித்து வைத்துக்கொள்வேன். பின்னர் அந்த எண்ணிற்கு குறுஞ்செய்திகளை அனுப்பி அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்வேன்.

என்னுடன் நெருக்கமாகும் பெண்களுடன் ஜாலியாக இருப்பேன் என தெரிவித்தார். அதே சமயம் தன்னுடன் பழக மறுக்கும் பெண்களின் எண்ணிற்கு இதுபோல ஆபாச படங்களை அனுப்பி வினோத் தொல்லை கொடுத்து வந்ததையும் கூறினார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வெளியூருக்கு கணவர் அடிக்கடி செல்வார்.. என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோ என அவனிடம் கூறினேன்.. மனைவியின் வாக்குமூலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *