போனிகபூர் துபாயை விட்டு வெளியேற தடை: துபாய் போலீசார் கிடுக்கிப்பிடி!

சினிமா

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக போனிகபூரை துபாய் போலீசார் துருவித்துருவி விசாரிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போனிகபூர் துபாயை விட்டு வெளியேற தடை: துபாய் போலீசார் கிடுக்கிப்பிடி!

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரீதேவி(54). துபாயில் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், துபாய் போலீசார் அனுமதி கொடுக்கும் வரை போனிகபூர் துபாயை விட்டு வெளியேறக்கூடாது என போலீசார் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துபாய் ஓட்டலில் நடிகை ஸ்ரீதேவியைக் கடைசியாக உயிருடன் பார்த்தவர் என்ற முறையில், அவரது கணவர் போனிகபூரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பர் துபாய் காவல்நிலையத்துக்குப் போனி கபூரை அழைத்து ஸ்ரீதேவி மரணம் தொடர்பான சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டனர். ஒன்றரை அடி உயரமே கொண்ட குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி வலுக்கட்டாயமாக ஏன் மூழ்கடிக்கப்பட்டிருக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் இறுதியாக 5.30 முதல் 5.45 வரை போனிகபூர் மட்டுமே ஸ்ரீதேவியுடன் இருந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்தே ஸ்ரீதேவி உயிரிழந்துள்ளார்.

மேலும், ஸ்ரீதேவி கடைசியாகப் பேசிய வார்த்தையை நினைவுகூர்ந்து சொல்லுமாறு போனி கபூரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியின் இடையே இந்தியா வந்த போனி கபூர் மீண்டும் துபாய் திரும்பியது ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றபின் அவரை மீண்டும் ஓட்டலுக்கு செல்ல அனுமதித்தனர். முதலில் தடை வித்த துபாய் அரசு தற்போது விசாரணைக்கு பின் இந்தியா செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *