போதை மருந்து கொடுத்து சீரழித்தார்.. நான் கர்ப்பமானேன்.. நடிகர் மீது தொலைக்காட்சி நடிகை பரபரப்பு புகார்

சினிமா

துணை நடிகர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் எனவும் அதனால் தான் கர்ப்பமாக உள்ளதாகவும் தொலைக்காட்சி நடிகை பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை Kahaani Ghar Ghar Ki”, “Des Mein Nikla Hoga Chand” and “Nach Baliye போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹரியானாவை சேர்ந்த வினீத் வெர்மா என்ற துணை நடிகர் தனக்கு நண்பராகி பின்னர் ஹொட்டலில் தனக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதன் காரணமாக தான் கர்ப்பமானதாவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வினீத்திடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதோடு வினீத் குடும்பத்தாருக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் அவருக்கு அவர்கள் ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நடிகையின் புகாரை தொடர்ந்து வினீத் மற்றும் அவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் வினீத்தின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப்பில் உள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது.

புகார் கொடுத்த நடிகைக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவரை அழைத்தால், தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் தற்போது டெல்லியில் உள்ளதாகவும் கூறுகிறார் என தெரிவித்துள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *