பேட்டி எடுக்க வந்த பெண் மீது ஏற்பட்ட காதல்! திருமணத்தில் முடிந்தது எப்படி? ரஜினியின் சுவாரசிய காதல்கதை

ஜோதிடம்

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஒரு நடிகர் ரஜினிகாந்த்.

வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இவ்வளவு ஆண்டுகள் இருந்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.

தனது எளிமையின் காரணமாகவே ஏழை எளிய மக்களை கவர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படிக்க படிக்க தீராத நாவல் போன்றது.

அவரின் காதல் கதைகளை கேட்டால் ஒரு படமே எடுத்துவிடலாம். அந்த அளவு சுவாரஷ்யங்கள் இருக்கின்றன.

ரஜினி – லதாவின் காதல் கதை பொதுவான காதல் கதை போன்றது அல்ல. உச்சத்தில் இருக்கும் ஓர் நடிகனுக்கு சாதாரண பெண் மீது காதல் வருவது என்பது சாதாரண விடயம் அல்ல.

சூப்பஸ்டாரை பேட்டி எடுக்க வந்த பெண்தான் லதா. அந்த பேட்டி எடுக்க சென்ற தருணம் தான் லதா ரங்காச்சாரி லதா ரஜினிகாந்தாக மாற பாதை போட்டு கொடுத்தது என்று கூறலாம்.

தில்லுமுல்லு திரைப்பட ஷூட்டிங்-ன் போது தான் ரஜினியும் லதாவும் முதன் முறையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொண்டனர்.

பேட்டியின் போதே லதாவை திருமணம் செய்துக் கொள்கிறாயா? என கேள்விக் கேட்டு திணற வைத்தாராம் ரஜினி. இதற்கு லதா பெற்றோரிடம் கேட்டு சொல்வதாய் கூறி சென்றுள்ளார்.

ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன் மற்றும் முரளி பிரசாத் லதாவின் பெற்றோர்களை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

கடந்த 1978-79 என இரண்டு ஆண்டுகளில் தினமும் ஷூட்டிங் சென்று நடித்து வந்தார் ரஜினி. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இரவு பகலாக ஓய்வு இன்றி நடித்து வந்துள்ளார். இதனால் நரம்பியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த லதா அவருக்கு தாய்மை பாசம் தேவை என்பதை உணர்ந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

அவர்களின் உண்மையான காதலும் திருமணத்தில் முடிந்தது. நரம்பியல் பிரச்சினையில் இருந்து சரியாகிய பிறகு 1981-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்துக் கொண்டனர்.

ரஜினியின் ஆன்மீகம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட நிறைய மாற்றங்களுக்கு லதா ரஜினியின் காதலும், அன்பும் தான் காரணம்.

அன்பான மனைவி இருந்தால் எந்த பிரச்சினையையும் எளிதாக கடந்து வரலாம் என்பதற்கு இந்த ஜோடி ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

இதேவேளை, ஜாக்கி சானுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய ஆசிய நடிகர் ரஜினிகாந்த் தானாம். இவரது ஸ்டைலை யாராலும் இன்று வரை இவரைப் போலவே செய்ய முடியாது.

இது போன்ற பல விடயங்கள் இவரை இன்றும் தனித்துவமாக காட்டுகின்றது என்றால் மிகையாகாது. நடிகராக இருக்கும் இவரின் வாழ்க்கை வரலாறு கூட மிக விரைவில் படமாக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *