பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்

சினிமா

பிக் பாஸ்’ தேடித் தந்திருக்கும் புகழால் உற்சாகம் அடைந்துள்ள லாஸ்லியா, இனி தமிழகத்தில் குடியிருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் ஆதரவால் தான் தாம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

“என் பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் எனச் சொல்லிச் சொல்லித் தான் எங்களை வளர்த்தார்கள். நிச்சயமாக பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும்,” என்று தெரிவித்துள்ளார் லாஸ்லியா.

‘பிக் பாஸ்’ வீட்டில் தனது சக போட்டியாளரான நடிகர் கவினை இவர் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *