பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் அவதானம்…! கோயில் மடப்பள்ளியில் வைத்து சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சினிமா

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சிச் சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது.தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில், விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்றுப் பொருளாக ஒப்படைக்கப்பட்டது.சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து, தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு, அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகின்றதுபூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *