பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்த பெண்.. DNA பரிசோதனையில் அவர் அம்மாவின் குட்டு வெளியானது

மருத்துவம்

அமெரிக்காவில் பெண்ணொருவர் தனது பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்திருந்த நிலையில் தனக்கு ஒரு சகோதரி இருப்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார்.

Omaha நகரை சேர்ந்தவர் ரிபேக் ஹுஜஸ். இவர் தனது பெற்றோருக்கு தான் ஒரே குழந்தை என நினைத்து வந்தார்.

இந்நிலையில் அது உண்மையில்லை என 30 வயதை கடந்த பின்னர் ரிபேக்குக்கு தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது ரிபேக்கின் உமிழ்நீரில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை செய்யப்பட்ட அதே கூடத்தில் லவுரா என்ற பெண்ணின் உமிழ்நீரும் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இரண்டும் ஒத்து போனது தெரியவந்தது.

 

இதையடுத்து ரிபேக்கின் சகோதரி தான் லவுரா என உறுதியானது.

அதாவது ரிபேக் மற்றும் லவுராவுக்கு தாய் ஒருவர் தான் என்றாலும், தந்தை வேறு வேறு நபர்கள் என தெரியவந்துள்ளது.

இது குறித்து ரிபேக் கூறுகையில், நான் ஒரே குழந்தை என்று நினைத்தே வளர்ந்தேன், சிறுவயதிலிருந்தே தனிமையை உணர்ந்துள்ளேன், அது போன்ற சமயங்களில் புத்தகங்கள் தான் எனக்கு துணையாக இருக்கும்.

எனக்கு சகோதரி ஒருவர் இருப்பது தற்போது தெரியவந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

லவுராவிடம் நான் பேசிவிட்டேன், இருவரும் சேர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த சமயத்தில் எங்களின் தாயும் எங்களுடன் இருப்பார் என நம்புகிறோம் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *