பெண்ணாக பிறந்தது குற்றமா? விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பிரபல பிக்பாஸ் நடிகை

சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வருபவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான சம்பவங்கள் பற்றி கூறி நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றுள்ள நடிகை Rashami தனது இளம் வயதில் நடந்த சம்பவங்கள் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

“மிக ஏழ்மையான குடும்பத்தில் தான் நான் பிறந்தேன். நான் பெண்ணாக இருப்பதாலேயே பல பிரச்சனைகளை சந்தித்தேன், என் அம்மாவும் அதிகம் கஷ்டப்பட்டார். ‘நமக்கு ஏன் பெண் பிறந்தாள்? அவளால தான பண பிரச்சனை’ என கூறுவார். பெண்ணாக பிறந்ததே குற்றம் என நான் நினைக்க ஆரம்பித்தேன்.”

“நான் என் குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு நாள் விஷம் குடித்துவிட்டேன். என் ஆண்டிக்கு கால் செய்து கூறினேன். மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றினார்கள். அதன் பிறகும் என்னை பலர் எரிச்சலூட்ட முயன்றார்கள். ஆனால் I never gave up” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *