பெண்கள் கட்டாயம் படிக்கவும்…கிராமத்து மீன் குழம்பு செய்யும் முறை!

ஆரோக்கிய சமையல்

 

பெண்கள் கட்டாயம் படிக்கவும்…கிராமத்து மீன் குழம்பு செய்யும் முறை!  

தமிழகத்தின் தென் மாவட்டங்களில், அதுவும் கடற்கரையோரப் பகுதிகளில் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீன்குழம்பு வைக்கும் வழக்கம் உண்டு.சின்ன வெங்காயமும் பூண்டும் மணக்க, காரசாரமாக மண்சட்டியில் வைக்கப்படும் அந்த மீன் குழம்புக்கு விலையாக உலகையே தரலாம்.

தேவையான பொருட்கள்

மீன் – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 10 பல்

புளி – சிறிய எலுமிச்சை அளவு

தேங்காய் – 1 துண்டு

சீரகம் – தேக்கரண்டி

மஞ்சள்பொடி – 1/4 தேக்கரண்டி

வத்தல் பொடி – 1 1/2 தேக்கரண்டி

மல்லிப்பொடி – 3 தேக்கரண்டி

Sponsored Content

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 2 இணுக்கு

செய்முறை

வெங்காயம் பூண்டை உரித்து நறுக்கிவைக்கவும்.

தக்காளியையும், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும்.

தேங்காயை சீரகத்துடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

மண்சட்டியில், ஒரு குழிக்கரண்டி அளவு நல்லெண்ணெய் விட்டு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டுப் பற்கள் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து, மஞ்சள், வத்தல், மல்லிப் பொடிகளைச் சேர்க்கவும்.

மசாலா நன்கு கொதித்ததும், மீன்களைப் போட்டு, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் மூடியிட்டுக் கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிகையில் அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *