பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுப்பேன்… அதன் பின்? பொலிசாரை அதிரவைத்த இளைஞன்

சினிமா

தமிழகத்தில் பெண்களின் புகைப்படத்தை பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்ட நிலையில், அவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கைஸ் முகமது என்ற 27 வயது நபரை பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் பொலிசார் கைஸ் முகமதுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கைஸ் முகமது அளித்த வாக்குமூலம் பொலிசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில், நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். எம்.பி.ஹெச் படித்துவிட்டு சில நிறுவனங்களில் வேலை பார்த்தேன். நான் ஒரு ஜாலியான டைப் என்பதால் என்னிடம் அனைவரும் நெருங்கி பழுகுவார்கள்.

தற்போது நான் சென்னையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் அலுவலகராக பணியாற்றி வருகிறேன். நான் என்னுடைய படிக்கும் காலத்தில் இருந்தே, பெண்களை பல்வேறு கோணங்களில் செல் போனில் படம் பிடித்து ரசிப்பேன்.

அந்தப் பழக்கத்தை தற்போது வரை என்னால் கைவிடமுடியாத காரணத்தினால், வேலைக்குச் சென்ற இடங்களில் என்னுடன் வேலை பார்த்த பெண்களுக்குத் தெரியாமல் செல்போன்களில் படம் எடுத்தேன். அந்தப் புகைப்படங்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ரசித்துப் பார்ப்பேன்.

அதன் படி தற்போது நான் பணியாற்றும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாக போட்டோ எடுப்பேன். சில நேரங்களில் வீடியோவும் எடுப்பேன், அதன் பின் அந்த புகைப்படங்களை வீடியோவாக எடிட் செய்து, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் போலியாக ஐடி துவங்கி அதில் பதிவேற்றம் செய்வேன்.

அதற்கு லைக்குகள் குவியும், எனக்கு தெரிந்த பெண்களிடம் செல்பி எடுப்பேன், அதையும் பேஸ்புக்கில் பதிவு செய்வேன்,

நான் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு அதிகளவில் லைக்ஸ் கிடைத்தன.

இதன் காரணமாக, தினமும் பெண்களின் புகைப்படங்களை பதிவு செய்துவந்தேன். நான் காதலித்த பெண்ணுடன் ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்தேன். அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் பதிவு செய்தேன்.

என் காதலியின் தோழி என்னிடம் பழகினார். அவருக்குத் தெரியாமல் அவரையும் புகைப்படம் எடுத்தேன். அதையும் பதிவு செய்தேன். நான் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு நானே ஆபாசமாக கமென்ட்ஸ் பதிவு செய்வேன், லைக்ஸ்கள் அள்ளியது.

பெண்களிடம் புகைப்படம் எடுக்க முடியாத நேரங்களில், பேஸ்புக்கில் அழகான புகைப்படங்களை பதிவு செய்யும் பெண்களின் போட்டோக்களை எடுத்து அதையும் பதிவு செய்துள்ளேன்.

என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக பெரும்பாலான பெண்களின் முகங்களை மறைத்துதான் பதிவு செய்வேன். எனக்குத் தெரியாத பெண்களின் புகைப்படங்களை மறைக்க மாட்டேன்.

என்னுடைய போலி பேஸ்புக் ஐடியைப்பார்த்த பெண் ஒருவர், அதில் தன்னுடைய ஆபாச போட்டோ இருப்பதைப் பார்த்து என்னிடம் கேட்டார். அந்தப்படத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினேன், ஆனால் அந்தப் பெண் என் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் சிக்கிவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

இந்த சம்பவத்தை அறிந்த அவனின் பெற்றோர் உனக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, உன்னை ஜாமீனில் கூட எடுக்கமாட்டோம் என்று கூறி காவல்நிலையத்தை விட்டு சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *