புருவம் அடர்த்தியாக வளர இத செய்யுங்கள்!…, dark eyebrow, tamil beauty tips,

அழகுக் குறிப்புகள்

சிலருக்கு புருவத்தில் முடியே வளராது. சிலருக்கு முடி மிக மெரிதாக இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் போல அடர்த்தியாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அப்படி அடர்த்தியான புருவம் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டாம்.

புருவம் அடர்த்தியாக வளர ஆலிவ் எண்ணெய் துணைபுரியும்.

உடல் வெப்பம், மன அழுத்தம், வயது முதிர்வு காரணமாகப் புருவ முடிகள் உதிரக்கூடும். அதனால் தூங்குவதற்கு முன்பாகத் தினமும் காதைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பட்ஸ் மூலம் ஆலிவ் எண்ணெயைப் புருவத்தில் தேய்த்து, அதே பட்ஸால் நன்கு மசாஜ்போல செய்துவிடவும்.

பிறகு, ஐபுரோ பென்சிலால் எண்ணெயைத் தொட்டுப் புருவத்தின் வடிவத்துக்கு பென்சிலால் வரைந்துகொள்ளவும்.

இப்படிச் செய்வதால் வலுவிழந்த புருவ முடிகள் வளரும்.

அதேபோல் புருவம் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க மிகச் சிறந்தது விளக்கெண்ணெய்.

இந்த விளக்கெண்ணெய் தினமும் இரவில் தூங்கும் போது புருவங்களில் விரல்கள் அல்லது பட்ஸ் மூலம் தடவி வந்தால், மிக விரைவிலேயே அடர்த்தியும் கருமையும் நிறைந்த முடி வளருவதை மிக வேகமாகவே வளர்வதை உங்களால் உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *