புதிய காதலருடன் மைனா நந்தினி வெளியிட்ட காட்சி… ரொமான்ஸை நீங்களே பாருங்க!

சினிமா

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இதற்கிடையில் கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழக்கை செட் ஆகாத நந்தினிக்கு அவரது புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் இருந்து வந்தது. இதனால் அவரது கணவர் கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்நிலையில் நடிகை நந்தினியுடன் நடித்து வரும் நடன இயக்குனருடன் மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதை உறுதி செய்தும் உள்ளார். தற்போது டிக்டாக்கில் இருவரும் இணைந்து நடனமாடியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *