பிரபல ஹீரோவுக்காக லைப்ப தொலைக்க தயாரான முன்னணி நடிகை..! – உச் கொட்டும் ரசிகர்கள்..!

சினிமா

உலக ஹீரோ நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது இந்த நாட்டு குடிமகனின் இரண்டாம் பாகம். இந்த படத்தில், பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.
உலக ஹீரோவுக்கு கிட்டதட்ட இது தான் கடைசி படம் என்கிறார்கள். அவரு அரசியலுக்கு செல்லவிருகிறார் அவர் எப்படி வேண்டுமானலும் நடிப்பார். ஆனால், நான் நடிக்கிறேன் என்று முண்டியடித்து கொண்டு போன நடிகையை பார்த்து தான் உச் கொட்டுகிறார்கள் ரசிகர்கள்.
தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்த பிரியமான நடிகை இப்போது தான் வளர்ந்து வருகிறார். சொல்லிக்கொள்ளும் படியான ரசிகர் வட்டத்தையும் பெற்றுள்ளார் அம்மணி.
இந்நிலையில் தான் உலகஹீரோவுக்கு ஜோடியாக 85 வயது பாட்டி வேடத்தில் நடித்து வருகிறார் அம்மணி. ஆம், உலக ஹீரோ 95 வயது தாத்தாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த சுக நடிகைக்கு பதிலாக நடிக்கிறார் பிரியமான நடிகை.
இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில் கிழவி கெட்டப்பில் படம் முழுக்க நடித்தால் மார்க்கெட்
செம்ம அடி வாங்கும். உலக ஹீரோவுக்காக லைப்ப தொலைக்க ரெடியாகிட்டாங்களே இந்த நடிகை என்று உச் கொட்டுவதை தவிர ரசிகர்களால் வேறு எதையும் செய்ய முடியாது.
முன்னதாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சமீபத்தில் சிவ நடிகருக்கு தங்கையாக நடித்த ஐஸ் நடிகை தான். ஆனால், விவரமான ஐஸ் நடிகை ஆளை விடுங்கப்பா சாமி என்று எகிறி விட, வாண்டாடக வந்து வண்டியில் ஏறியுள்ளார் பிரியமான நடிகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *