பிரபல சீரியல் நடிகை வினோதினியின் கணவருக்கு ஏற்பட்ட விபத்து- தற்போது அவரது மோசமான நிலை

சினிமா

தமிழில் பல படங்கள், சில சீரியல்கள் நடித்தவர் வினோதினி. பிஸியாக நடித்துவந்த அவர் நடுவில் திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகவே பிரபல தொலைக்காட்சியின் அக்னி நட்சத்திரம் தொடரில் கமிட்டானார். ஆனால் சில மாதங்களிலேயே அதில் நடிக்க முடியாது என வெளியேறினார்.

அண்மையில் வினோதியின் கணவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது, இதனால் அவர் கால் நடக்க முடியாமல் வீல் சேரில் பயணம் செய்கிறார்.

இதுகுறித்து நடிகை வினோதினி ஒரு பேட்டியில், சஞ்சீவ், விக்ரம் இரண்டு பேர் எங்களது வீட்டை புதுப்பித்து தருகிறோம் என அக்ரீ மெண்ட் போட்டார்கள். ஆனால் வீட்டையும் அவர்கள் புதுப்பிக்கவில்லை, அக்ரீ மெண்ட்டையும் தரவில்லை.

அன்று அவர் இது சம்பந்தமாக தான் பயணம் செய்தார். பிசினஸ் போச்சு, என் கணவர் நடக்க முடியாமல் ஆனார், பணம் போனது என அடுத்தடுத்து பல கஷ்டங்கள்.

எதிர்காலத்தில் என் கணவருக்கு ஏதாவது ஆனால் அதற்கு அந்த இரண்டு பேர் தான் காரணம் என வினோதினி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *