பிக்பாஸ் கவின் 3 வருடங்கள் காதல் உறவில் இருந்ததது பிரபல இளம் ஹீரோயின் பிரியா பவானி ஷங்கரா?

சினிமா

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் முன்னாள் காதலி இளம் ஹீரோயினான பிரியா பவானி ஷங்கர் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர் கவின். விஜய் டிவி புராடெக்ட்டான கவின், அந்த சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

சாக்ஷியுடன் காதல்

கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி, அபிராமி, ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரிடமும் கடலை போட்டு வந்தார். பின்னர் சாக்ஷியை காதலிப்பதாக கூறினார். தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்ணிடம் உள்ள அனைத்து தகுதியும் இருப்பதாக கூறினார். கவினை பிடிக்கும் ஆனால் கவினிடம், சக போட்டியாளரான லாஸ்லியா தொடர்ந்து வழிந்து வந்தார். கவினை பிடிக்கும், கதைக்க பிடிக்கும், சைட் அடிப்பேன் என்ற அவர், தங்களுக்குள் இருப்பது வெறும் பிரன்ட்ஷிப்தான் என்றார்.

காதலை ஒப்புக்கொண்டார் பின்னர் சாக்ஷியின் விவகாரத்தால் கவினிடம் என்னுடன் இனி கதைக்காதே என்று கூறிய லாஸ்லியா, அடுத்த நாளே உன்னுடன் கதைக்காமல் இருக்க முடியாது என்றார். சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவினை காதலிப்பதை ஒப்புக்கொண்டார். கமல் போட்ட விளக்கப்படம் கவினும் லாஸ்லியாவை சீரியஸாக காதலித்து வருவதாக கூறினார். இருவரும் காதலித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு கேட்கக்கூடாத தெரியக்கூடாத விஷயங்களையும் அவர்கள் பேச தொடங்கியிருப்பது கடந்த வாரம் கமல் போட்ட விளக்கப் படத்திலேயே தெரிந்தது.

3 வருடங்கள் உறவு தங்களின் காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது வெளியே போய்தான் என்றும் இருவரும் தீர்மானித்திருப்பதாக லாஸ்லியா தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒளிப்பரப்பான எபிசோடில் கவின், தான் 3 வருடங்கள் ஒரு பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறினார். வெளியே போய் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாகவும் கூறினார் கவின். ஆனால் லாஸ்லியா அதுகுறித்து வெளியே போய் பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

பிரியா பவானிஷங்கர்? இந்நிலையில் கவின் மூன்று வருடங்கள் காதல் உறவில் இருந்ததாக கூறப்படும் பெண் இளம் ஹீரோயின் ஒருவர் என பேசப்படுகிறது. அந்த நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலின் மூலம் பிரபலமாகி, சினிமா படங்களில் தற்போது நடித்து வரும் பிரியா பவானிஷங்கர்தான் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

வைரலாகும் ஸ்க்ரீன் ஷாட்ஸ் மேலும் பிரியா பவானிஷங்கரும் கவினும் சேட் செய்ததன் ஸ்க்ரீன் ஷாட்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த தகவல் உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் பிரியா பவானிஷங்கர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றும் அப்போது உண்மை வெளிவரும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *