பாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்!

சினிமா

 

 

தற்போது திருமணமான பல தம்பதியர்களின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்கின்றனர். அலுவலகத்தில் வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து, அதன் விளைவாக உறவில் ஈடுபட முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர்.

Foods That Increase Romantic Desire

தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருந்தால் தான், அவர்கள் சண்டை சச்சரவின்றி சந்தோஷமாக இருப்பார்கள். அதிலும் வார இறுதி நாட்களில் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் குதூகலமாக இருக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உண்ணுங்கள். இதனால் உங்கள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்கலாம். சரி, இப்போது பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகளைக் காண்போம்.

செலரி

செலரி
உடலுறவில் ஈடுபட நினைக்கும் போது செலரியை சாப்பிட்டு செல்வது சிறந்த தேர்வாக இருக்காது. ஆனால் இதில் பாலுணர்ச்சியைத் தூண்டும் உட்பொருட்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. செலரியில் ஆண்ட்ரோஸ்டிரோன் உள்ளது. இது ஒரு மணமற்ற ஹார்மோன் மற்றும் ஆண் வியர்வை மூலம் வெளியிடப்படுகிறது மற்றும் பெண்களை இயக்குகிறது.

சாப்பிடும் முறை

சாப்பிடும் முறை
செலரியை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. அதற்கு செலரியை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிட்டு செல்லுங்கள்.

கடல் சிப்பி

கடல் சிப்பி
பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றொரு சிறப்பான உணவுப் பொருள் தான் கடல் சிப்பி. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது. இது விந்தணுக்களை அதிகரிக்க உதவுவதோடு, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கும் உதவுகிறது. கடல் சிப்பியில் டோபமைன் என்னும் பாலுணர்ச்சியை அதிகரிக்க உதவும் ஹார்மோன் உள்ளது. எனவே முடிந்தால் வார இறுதியில் கடல் சிப்பியை வாங்கி உங்கள் துணையுடன் ருசித்து சாப்பிட்டு, வார இறுதியை சந்தோஷமாக இருங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் புரோமெலைன் நொதி உள்ளது. இது பாலுணர்ச்சியைத் தூண்டும் மற்றும் ஆணின் மலட்டுத்தன்மையைப் போக்கும். மேலும் இப்பழத்தில் உள்ள பொட்டாசியம், பி வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், ஒட்டுமொத்த உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும்.

அவகேடோ

அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது புரோட்டீனை வளர்சிதை மாற்றம் புரிந்து, உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கும். இதில் உள்ள வைட்டமின் பி6, ஆண் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் பொட்டாசியம், தைராய்டு சுரப்பியை சீராக செயல்பட உதவும். இந்த இரண்டு உட்பொருட்களால், ஆண் மற்றும் பெண்களின் பாலுணர்ச்சி அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவி புரியும்.

பாதாம்

பாதாம்
பாதாமில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. முக்கியமாக ஆண்கள் பாதாமை சாப்பிட்டால், ஆண் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி பாதாமின் நறுமணம் பெண்களின் ஆர்வத்தைத் தூண்டும். முக்கியமாக பாதாமை உப்பு ஏதும் சேர்க்காமல் பச்சையாக சாப்பிடுங்கள். வேண்டுமானால், சாப்பிடும் சாலட்டுகளின் மீது பாதாமை சேர்த்தும் சாப்பிடலாம்.

மாம்பழம், பீச் மற்றும் ஸ்ட்ராபெர்ரி

மாம்பழம், பீச் மற்றும் ஸ்ட்ராபெர்ரி
இந்த பழங்களின் சுவை மற்றும் மணம் அற்புதமாக இருப்பதோடு, உறவில் ஈடுபடும் போது தம்பதிகள் ஊட்டி விளையாடவும் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக இந்த பழங்கள் உங்கள் ரொமான்டிக் இரவை மேலும் குதூகலமாக்கும். எனவே இந்த பழங்களை எப்போதும் வாங்க மறக்காதீர்கள்.

முட்டை

முட்டை
முட்டையில் வைட்டமின் பி6, வைட்டமின் பி5 போன்றவை அதிகம் உள்ளது. இவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக்க உதவுவதோடு, மன அழுத்தத்தை எதிர்க்கும். ஒருவரது பாலுணர்ச்சி சிறப்பாக இருப்பதற்கு இந்த இரண்டு விஷயங்களும் தான் முக்கியம். அவற்றை முட்டை சரிசெய்யக்கூடியது என்பதால், முட்டை சாப்பிட மறவாதீர்கள்.

அத்திப்பழம்

அத்திப்பழம்
அத்திப்பழத்தில் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இவை பாலியல் ஸ்டாமினாவை மேம்படுத்தக்கூடியவை. ஆகுவே நற்பதமான அத்திப்பழங்களை அப்படியே சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் ஜூஸ் வடிவில் கூட எடுங்கள்.

பூண்டு

பூண்டு
உடலுறவில் ஈடுபடும் முன் பூண்டு சாப்பிட்டால், லிப் கிஸ் அடிக்க உங்கள் துணை யோசிக்க வாய்ப்புள்ளது. ஆனால் பூண்டில் உள்ள அல்லிசின், அந்தரங்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியவை. ஆகவே பூண்டு பற்களை சாப்பிடுவதற்கு பதிலாக, பூண்டு கேப்ஸ்யூல் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

சாக்லேட்

சாக்லேட்
சாக்லேட்டில் தியோபுரோமின் என்னும் அல்கலாய்டு உள்ளது. இது காப்ஃபைன் போன்றது. மேலும் சாக்லேட்டில் பீனைல்எத்திலமைன் என்னும் காதலுணர்வை உற்பத்தி செய்யும் கெமிக்கல் உள்ளது. ஆகவே உங்கள் துணைக்கு சாக்லேட்டை கொடுப்பதற்கு பின் உள்ள காரணத்தை அறிந்து கொடுங்கள். அதிலும் டார்க் சாக்லேட் கொடுப்பது இன்னும் நல்லது. ஏனெனல் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

எனவே துணையுடன் படுக்கையில் குதூகலமாக விளையாடும் முன் சாக்லேட்டை இருவரும் சுவைத்து மகிழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *