பாபி சிம்ஹா – ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை

சினிமா

காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதனைத் தொடர்ந்து ‘நேரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருது பெற்றார்.
இவர் நடிகை ரேஷ்மி மேனனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு நேற்று (11.11.2019) ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாபி சிம்ஹா - ரேஷ்மி
பாபி சிம்ஹா தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *