பரவை முனியம்மா பாட்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை! மிரண்டு போன பிரபலங்கள் – உண்மை சம்பவம்!

சினிமா

பரவை முனியம்மா பாட்டி காலமாகிவிட்டார் என்ற செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை சினிமாவில் அடையாளப்படுத்தியது சிங்கம் போலே நடந்து வரான் செல்லப்பேராண்டி என வந்த தூள் பட பாடல் தான்.

விக்ரம், ஜோதிகா, ரீமே ஷென், விவேக் ஆகியோர் நடித்த இப்படத்தில் பரவை முனியம்மா பாட்டி நடித்து பாடியிருந்தார். இப்படத்தில் 6 பாடல்களை கவிஞர் அறிவு மதி எழுத பாடல்களை யாரை பாடவைப்பது என இசையமைப்பாளர் வித்யா சாகருடன் நடந்ததாம்.

ஒரு முறை பயணத்தின் போது பரவை முனியம்மாவின் குரலை கேட்டேன். அவரை சிங்கம் பாடலை பாட வைக்கலாம் என முடிவு செய்துவிட்டார்களாம்.

பின் ரெக்கார்டிங் அழைத்து வந்த போது உடன் சங்கர் மகாதேவன், சுஜாதா ஆசை ஆசை இப்பொழுது பாடல் எழுதப்பட்ட தாளை பார்த்து 4 டேக் எடுத்து பாடி முடித்தார்களாம்.

பின் பரவை முனியம்மாவிடம் இது தான் உங்க பாட்டு, மூன்று முறை பார்த்து பாடி வாசித்துக்கொள்ளுங்கள் என அறிவு மதி கூறினாராம்.

ஆனால் முனியம்மா எனக்கு படிக்க தெரியாது, ஒரு தடவை வாசித்துக்காட்டி மெட்டு போடுங்க,அப்படியே நான் மனசுல உள்வாங்கி பாடிருவேன் என கூறினாராம்.

பின் மதிய உணவு வேளை முடிந்த பின் ரெக்கார்டிங்கை வித்யாசாகர் ஆரம்பிக்க பாடலை மனப்பாடமாக ஒரே டேக்கில் பாடி அசத்த அனைவரும் அசந்துப்போனார்களாம்.

இது தான் பரவை முனியம்மா பாட்டியில் தனித்திறமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *