பசிக்குது.. சோறு போடும்மா.. கெஞ்சிய கணவர்.. அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி

உடல் ஆரோக்கியம்

பசிக்குதுன்னு சாப்பாடு கேட்ட கணவன்..அரிவாளால் வெட்டி வீழ்த்திய மனைவி- வீடியோ கோட்டயம்: நாட்டில் சீரியல் பைத்தியங்களுக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. “சோறு போடாமல் என்ன டிவி வேண்டிக் கிடக்கு” என்று கோபமாக கேட்ட கணவரை அரிவாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார் பாசக்கார மனைவி ஒருவர். கேரளத்தில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது. அரிவாளும் கையுமாக மனைவியை இப்போது போலீஸார் கைது செய்து உள்ளே தள்ளியுள்ளனர். கோட்டயத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனர்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ். சம்பவத்தன்று இரவு வெளியில் போய் விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் அபிலாஷ். அப்போது டிவி பார்த்துக் கொண்டிருந்தார் அவரது மனைவி. அவர் ஒரு டிவி பைத்தியமாம். எப்போது பார்த்தாலும் சீரியல்தானாம்.

இதனால் புருஷன் பொண்டாட்டிக்கு இடையே எப்பவும் சண்டை நடக்குமாம். அன்றும் கூட பசியோடு வந்த அபிலாஷ் சாப்பாடு போடச் சொல்லியுள்ளார். ஆனால் மனைவியோ “இருங்க இந்த சீரியல் முடியட்டும் வர்றேன்” என்று கூறியபடி டிவியிலிருந்து பார்வையைத் திருப்பவில்லையாம். இதனால் கோபமாகியுள்ளார் அபிலாஷ். “எப்பப் பார்த்தாலும் சீரியல்தானா” என்று கோபமாக கேட்டார் போலத் தெரிகிறது.

அப்போது வீட்டில் மனைவியின் தாய் தந்தையும் இருந்துள்ளனர். அவர்கள் கோபமாக அபிலாஷை திட்டியுள்ளனர். அவ்வளவுதான்.. பிரச்சினை பெரிதானது. இந்த நிலையில் சீரியல் பார்க்க முடியாமல் செய்து விட்டாரே. இப்படி பிரச்சினையாக்கி விட்டாரே என்று கோபமடைந்த அபிலாஷின் மனைவி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவரை ஆத்திரத்துடன் வெட்டி வீழ்த்தி விட்டார். படுகாயமடைந்த அபிலாஷ் கீழே விழுந்து துடித்தார்.

உடனடியாக அவரை கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குமரோகம் போலீஸார் அபிலாஷ் மனைவியைக் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அபிலாஷ் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வார் என்று தற்போது போலீஸார் கூறுகின்றனர். என்ன கருமமோ!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *