நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் “கபசுரக்” சூரணத்தை வாங்க மத்திய அரசின் மருந்து நிறுவனம் ” இம்பாப்ஸ்”ல் குவியும் மக்கள். ! சித்த மருத்துவத்தில் வழி கிடைக்குமா.!?

மருத்துவம்

கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் ஜெர்மனி, அமெரிக்காவுடன் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. மேல் குறிப்பிட்ட நாடுகளில் ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடித்து முதல் கட்ட பரிசோதனை முடிந்து இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது. இவர்களுடன் பெங்களூர் டாக்டர் விஷால் ராவும் இணைந்திருக்கிறார்.

இது குறித்து ஏற்கனவே எமது தளத்தில் அறிய தந்திருந்தோம். இந்த நிலையில் ஆயுர் வேத, சித்த, யூனானி, வைத்தியர்களால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சூரணம் என்று ஒன்று அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. கபசுரக் சூரணம் என்றழைக்கப் படும் குற்றித்த சூரணத்த பயன் படுத்தின நோயெதிர்ப்பு சக்தி அதிகரிம்கும் என சித்த , யூனானி,சித்த மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் மக்கள் அதனை வாங்க போட்டிபோடுகின்றர்.

இந்த மருந்தானது சென்னை திருவான்மியூரில் அமைந்திருக்கும் மத்திய அரசின் மருந்து நிறுவனமான இம்காப்ஸ் மருத்துவமனையில் கிடைப்பதை தொடர்ந்து மக்கள் இம்காப்ஸ் மருத்துவ மனையில் குவிந்துள்ளதுடன் பெற்றுக் கொள்கின்றனர்.

இந்திய பிரதமர் மோடி அவர்கள் சித்த , ஆயுர்வேத , யூனானி மருத்துவர்கள் உடன் நடத்திய முக்கிய சந்திப்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் சூரணம் சிறந்தது எனவும் கொரோனா அறிகுறிகள் என கூறப்படுகின்ற இருமல், சளி, மூச்சித் திணறல், உடல் வலி போன்றவற்றிற்கு கபசுரக் சூரன நீர் 60 மில்லி வரை குடித்தால் குண்மாகும் என பரிந்துரை செய்ததை தொடர்ந்து மோடி அவர்கள் ஏற்றுக் கொண்டார்.

இதனால் முற்றிலும் மூலிகையினால் ஆனது அத்துடன் இந்த சூரணம் தற்போது விற்பனையில் உள்ளது. சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை தினசரி 2 முறை தலா 60 மில்லி பருக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இருப்பினும் இது கொரோனாவை அழிக்கும் என்று நிரூபிக்கப் படவில்லை. இருப்பினும் நோயெதிர்ப்பு சக்தியை நிச்சதம் அதிகரிக்கும் என சித்த மருத்துவ சித்தர்கள் தெரிவிக்கின்றனர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *