நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 6 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..!

உடல் ஆரோக்கியம்

 

இன்று பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் எதிர்காலத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளனர். நம் வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க முடியும்.

ஆறு சிறந்த தீர்வுகள்.

(1) சர்க்கரையைத் தவிர்த்தல்.

மாப்பொருட்கள், இனிப்பு வகைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தக் கூடியவை.

உணவில் சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியும்.


(2) ஊட்டச்சத்து உணவுகளை தேர்ந்தெடுத்தல்.

பதப்படுத்தாத இயற்கை உணவு வகைகளை உட்கொள்வதால் நீரிழிவு, மன அழுத்தம், வீக்கம் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உணவில் அதிகளவு பழங்கள், காய்வகைகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்ளுதல் சிறப்பு.

(3) உடற்பயிற்சி.

தினமும் 30 நிமிடங்கள் நடந்து வந்தால் இதயத்துடிப்பு சீராகும். தொடர்ச்சியான கடிமையான உடற்பயிற்சியினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவடைந்து, இன்சுலின் அளவு அதிகரிக்கும்.


(4) போதியளவு தூக்கம்

தூக்கமின்மையால் உடல் உறுப்புக்களின் தொழிற்பாடு பாதிப்படைதல், சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற பல பிரச்சினைகள் உருவாகின்றன.

தினமும் போதிய அளவு தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமானது.

(5) மன அழுத்தத்தை குறைத்தல்

வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையினால் ஏற்படும் மன அழுத்தம் இன்சுலின் அளவு, வீக்கம் போன்றவற்றை அதிகரிக்கச் செய்கின்றது.

மன அழுத்ததை தவிர்த்து வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.


(6) உடல் எடை

உடல் எடை நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. சம நிலையான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சிகள் செய்து வருவதனால் உடல் எடையை பேண முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *