நீதிபதி கண் எதிரே பயங்கரம்: மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீஸ் பிடித்தது

சினிமா

நீதிபதி முன்பே மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கு ஒன்றுகாக நீதிபதி கலைவாணன் முன்பு சரவணன் என்பவரும், அவரது மனைவி வரலட்சுமியும் ஆஜராகினர்.

Madras High Court , Man stabs wife in front of the judges

அப்போது சரவணன் திடீரென நீதிபதி முன்பே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவி வரலட்சுமியை குத்தினார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சரவணனை மடக்கிப் பிடித்தனர்.

சரவணனை போலீஸ் விசாரித்தபோது அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. படுகாயம் அடைந்த அவரது மனைவி வரலட்சுமி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *