நீண்ட நாள் கழித்து சந்தித்தபோது அஜித் கேட்ட கேள்வி.. பிரமித்து போன VJ ரம்யா

சினிமா

நடிகர் அஜித் மீடியா மற்றும் பொது நிகழ்ச்சிகள் எதற்கும் கலந்துகொள்வதில்லை. அவரை சந்தித்து பேசிய பிரபலங்கள் பலர் அவரது குணம் பற்றி பிரமிப்பாக பேசி நாம் கேட்டிருப்போம்.

அதுபோல தான் அஜித்தை சந்தித்த தருணம் பற்றி பிரபல டிவி தொகுப்பாளினி VJ ரம்யா பேட்டி அளித்துள்ளார். பில்லா படத்தின் ரிலீஸ் சமயத்தில் இவர் அஜித்தை சந்தித்து பேட்டி எடுத்துள்ளாராம். அதன் பிறகும் சிலமுறை எதேட்சையாக சந்தித்து பேசியுள்ளாராம்.

Related image

எப்போதோ ஒரு முறை இவரது வீட்டின் நாய் பெயரை கூறியிருந்தாராம், அது பற்றி பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்த போது, “டைகர் எப்படி இருக்கு, அம்மா எப்படி இருக்காங்க..?” என்று அஜித் கேட்டாராம்.

இது தனக்கு பிரமிப்பாக இருந்ததாக ரம்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *