நாகர்கோவில் காசியின் பித்தலாட்டத்தை கைப்பட வெளியிட்ட இளம்பெண்..

குற்றம்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மிஞ்சிய நாகர்கோவில் காசியின் விவகாரம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. நானாக எந்த பெண்ணையும் தேடி போகவில்லை, என் அழகில் மயங்கி பெண்கள் என் பின்னால் வந்தனர் என்று அவன் தெரிவித்துள்ளான்.

இது ஒருபுறமிருக்க காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் தன் கைப்பட எழுதிய கடிதத்தை நக்கீரன் குழு வெளியிட்டுள்ளது. அந்த பெண்ணை ஒரு நாள் வீடியோ காலில் அழைத்ததாகவும், தான் வர மறுத்ததால், நான் தானே உன் கணவன், நான் உன்னுடைய உடம்பை பார்க்க கூடாதா என்னை நம்பவில்லையா என்று ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தப் பெண்ணை வீடியோ கால் வர செய்துள்ளார்.

அதனை முழுமையாக ரெக்கார்டு செய்து விட்டாராம். இப்படி செய்ததால் மெல்ல மெல்ல அவனை விட்டு விலகுவதற்கு அந்த பெண் முயற்சி செய்துள்ளதார். ஆனால் இந்த வீடியோவை வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விபச்சாரி என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார் காசி.

இது ஒருபுறமிருக்க சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை ஓபன் செய்து, அதில் தான் பெரிய தியாகி போல பதிவிட்டு வந்தாராம். பெண்கள் அந்த பதிவுகளை பார்த்தால் மயங்குவது போல் காசியின் லீலை விளையாட்டு இருக்குமாம்.

அதாவது பெண்களை தெய்வமாக மதிப்பது போன்றும், அம்மா மற்றும் அக்காவை மிகவும் நேசிப்பதாக தோன்றும் பல பதிவுகளை வெளியிட்டு பெண்களை மயக்கி உள்ளாராம். இதை விட கொடுமை பெண்களை கைநீட்டி அடிப்பவன் ஆண்மகன் அல்ல என்பது போன்றும் தெரிவித்துள்ளார்.

தன்னை ஒரு தொழிலதிபராகவும், பைலட், இன்ஜினியர், லாயர், ஜிம் டிரைனர் என்று பல முகங்களில் அறிமுகப்படுத்திக் கொள்வானாம். இவன் வெளியிடும் பதிவுக்கு கமெண்ட் செய்யும் பெண்களின் கருத்துக்களை வயது வாரியாக பிரித்து மனதளவில் தனிமையாக இருக்கும் பெண்களுக்கு ஆறுதல் கூறுவது போன்று வளைத்து விடுவனாம்.

பெண்கள் தன்னை மறந்து அர்ப்பணிக்கும் அளவிற்கு இவனது ஆசை வார்த்தைகள் இருக்குமாம், இப்படி மயங்கி சம்மதிக்கும் பெண்களிடமிருந்து வங்கி கணக்குகளை தன்னுடன் இணைத்துக் கொள்வானாம். இதற்கு அடிபணியாத பெண்களின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் அப்லோட் செய்து விடுவேன் என்று காசி மிரட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு முறை தன்னை மிரட்டி காரில் வைத்து பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். நான் கூப்பிடும் போதெல்லாம் வரவேண்டும், இல்லையென்றால் நிர்வாண புகைப்படங்களை அப்லோட் செய்து விடுவேன் என்று பயமுறுத்தி உள்ளான். அதற்கும் ஒரு படி மேல் சென்று தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளை இவனே லாகின் செய்து அவர்களது தோழிகளையும் அழித்து விடுவானாம்.

இப்படி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காசியின் வழக்கு மிக பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இதற்கு பின் முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் இருப்பதாக அம்பலப்படுத்தியுள்ளது நக்கீரன். காசியினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜனநாயக மாதர் சங்கம் போராடி வருகின்றது.

இது ஒருபுறமிருக்க காசி வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் தானாகவே முன்வந்து பரிந்துரை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *