நடிகை மும்தாஜின் வாழ்க்கையில் விளையாடிய நபர் இவர் தான் – நடிகர் வெளியிட்ட ரகசியம்!

சினிமா

1999 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் தயாரித்து இயக்கிய ‘மோனிசா என் மோனலிசா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அப்படத்தை தொடர்ந்து, தமிழ்ப் படங்களில் மட்டும் இன்றி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்த மும்தாஜ், விஜயின் ‘குஷி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிரங்கடித்தார்.

தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வந்த மும்தாஜ், திடீரென்று கோடம்பாக்கத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். அவ்வபோது சில படங்களில் நடித்தாலும், மும்தாஜ் என்ற நடிகையை தற்போது தமிழக ரசிகர்கள் மறந்துவிட்டார்கள், என்று சொல்லும் நிலை தான் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகை மும்தாஜ் தொடர்ந்து நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்க காரணம், அவரது பி.ஆர்.ஓ தான், என்று பிரபல் நடிகர் பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.

பாபு கணேஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘370’ இப்படத்தில் ரிஷிகாந்த் ஹீரோவாகவும், மேகாலி ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள். வெறும் 48 மணி நேரத்தில் படமாக்கப்பட்டு சாதனை படமாக உருவாகியிருக்கும் இப்படம் தேசப்பற்றுப் படமாகவும் உருவாகியுள்ளது.

முழு படப்பிடிப்பையும் முடித்து புதிய சாதனை படைத்திருக்கும் பாபு கணேஷ், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து பேசும் போது, ”சில திறமையான நடிகைகள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுடன் இருப்பவர்கள் தான். நடிகை மும்தாஜும் அவரது பி.ஆர்.ஓ-வால் வாழ்க்கையையே தொலைத்துவிட்டார். இல்லை என்றால், அவர் தற்போதும் பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *