நடிகை நயன்தாரா அரசியலில் இறங்குகிறாரா? முக்கிய கட்சி பிரமுகர் திடீர் சந்திப்பு

சினிமா

கோலிவுட் சினிமாவில் நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் நடிகை நயன்தாரா. மற்ற நடிகைகளுக்கும் இவர் முன் உதாரணமாக இருக்கிறார் என்றே சொல்லலாம்.

தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்துள்ளார். இதற்காக கன்னியாகுமரி சென்ற அவர் பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

தன் காதலருடன் தொடர்ந்து அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலும் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய பாஜகவின் மூத்த தலைவர் நரசிம்மனும் வந்திருந்தார்.

அப்போது அவர் நயன்தாராவிடம் தன்னையும் தன் குடும்பத்தாரையும் அறிமுகப்படுத்தி பேசியதோடு தங்கள் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறார்.

தங்கள் கட்சியில் இணைந்தால் மக்களுக்கு நல்ல சேவை செய்யலாம். நல்ல அரசியல் எதிர்காலம் உங்களுக்கு இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

இதற்கு நயன்தாரா என்ன பதிலளித்தார் என்பது வெளியாகவில்லை. ஆனால் இந்த சந்திப்பு பேச்சுவார்த்தை 25 நிமிடங்கள் நீடித்ததாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *