நடிகை நக்மா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஜோதிகாவின் பல நாள் குடும்ப ரகசியம் அம்பலம்… கடும் வியப்பில் ரசிகர்கள்

சினிமா

நடிகை நக்மா ஜோதிகாவின் சொந்த அக்கா இல்லை என்ற தகவல் இன்று வரை பலருக்கு தெரியாத ரகசியமே.

நடிகை நக்மா பற்றி பலர் அறிந்திராத விடயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜோதிகாவின் உண்மையான உடன் பிறந்த சகோதரியின் பெயர் ரோஷினி. ஜோதிகாவின் தந்தை பெயர் சந்தர் சாதனா.

சினிமா தயாரிப்பாளரான இவரது முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகை நக்மா.

சந்தர் சாதனாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள்தான் ஜோதிகாவும், ரோஷ்ணியும்.

உறவு முறையில் இருவரும் அக்கா, தங்கையாக இருந்தாலும் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள் இல்லை. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வியப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஒரு கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக நடிகை நக்மா மற்றும் ஜோதிகா ஆகியோர் திகழ்ந்தனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் திறமைகளில் சலைத்தவர்கள் அல்ல.

ரஜினி, கமல், கார்த்திக் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தியிருந்தாலும் ‘36 வயதினிலே’ என்ற படம் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

தற்போது நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். இதேவேளை, நடிகை நக்மா சினிமாவில் இருந்து ஒதுங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *