நடிகை சிம்ரன் வாழ்வில் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய சோகமா? காதல் தோல்வியின் பின்னணியில் நடந்த அவலம்!

சினிமா

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களயும் தனது எடுப்பசையில் வசியம் செய்து வைத்தவர் நடிகை சிம்ரன்.

தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் தமிழ் கட்டி பறந்து வந்தார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்ட நடிகை சிம்ரன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார்.

அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் வருகிறார். சினிமா உலகில் காதல் தோல்வி, கிசுகிசுக்கள் எல்லாம் சகஜமான ஒன்றாகவே இருக்கிறது.

சிம்ரனின் சினிமா வாழ்க்கையிலும் காதல் கிசுகிசுக்கள் விட்டு வைக்க வில்லை. இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவரே கருத்து வெளியிட்டிருந்தார்.

அப்பாஸ்- சிம்ரன் காதல்

ராஜூசுந்தரம்- சிம்ரன் காதல்

கமலஹாசன்- சிம்ரன் ரகசிய கல்யாணம் என்ற அத்தனைக்கும் முற்றுபுள்ளி வைத்து அழகிய நட்பு எப்படி கதலானது என்பது பற்றிய விடையத்தினை பகிர்து கொண்டுள்ளார்.

இதில் அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தோம். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம்.

கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும் போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

என் காதலெல்லாம் நிஜமானது, தீபக்குடன்தான். தீபக் எனது சிறுவயது தோழன், அவன் என்னை ரிஷி என்றுதான் அழைப்பான்.

அவனுடன் காதலானதும் ஒரு விபத்து மாதிரிதான். நான் தீபக்கை கல்யாணம் செய்துகொள்வேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. பெரியவர்கள் சொல்வது போல இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட பந்தம்.

எனக்கும் டான்ஸ்மாஸ்டர் ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விஷயங்களை அவன் கேள்விப்பட்டு ஒரு நாள் என்னிடமே நேரில் கேட்டான். அப்போதெல்லாம் தீபக் என்னோட விளையாட்டுதோழன். நல்ல நண்பன் என்ற உணர்வு மட்டும்தான் இருந்தது. அவனுக்கும்தான்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியும் தங்கை மோனலின் மரணமும் என்னை ரொம்பவே பாதித்தது. இன்னும் சொல்ல முடியாத பல விஷயங்கள் பாதித்தன. நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்தேன். இதை அம்மா அப்பாவிடம் சொன்னதும் அவர்களும் அந்த முடிவை ஆதரித்தார்கள்.

இனி உனக்கென்று ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாய் இரு என்றார்கள். அவர்களின் வார்த்தைகளில் அன்பும், தடவிக்கொடுத்த சிநேகமும் என்னை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது.

அப்போதுதான் என் அப்பா தீபக்கை பற்றி கேட்டார். என் வாழ்க்கையில் நல்லது நடந்தபோதெல்லாம் ஓடி வந்து வாழ்த்தி மகிழ்ந்தவன் தீபக்தான் என்று மனதில் உள்ளதைச் சொன்னேன்.

கணவர் நண்பராகவும், இருந்தால் ஒரு பெரிய பிளஸ், நம்மை முழுமையாக புரிந்து கொள்வார். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 43 வயதாகும் சிம்ரன் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இந்நிலையிலும் மிக இளமையாக இருக்கிறார். நீங்கள் இன்றும் கதாநாயகியாக கூட நடிக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *