நடிகர் ரஜினியின் முதல் காதல்… ஆச்சரியப்படுத்தும் உண்மைகள்…

சினிமா

பிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் எவ்வளவு பெரிய வலியை கடந்து இப்போது திரையுலகில் சாதித்துள்ளார்? திரையுலகில் அவர் வருவதற்கு யார் முக்கிய காரணம் என்பதை பிரபல திரைப்பட நடிகர் தேவன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுமட்டுமின்றி அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வர வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று திரைப்பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.

அவரும் விரைவில் கட்சியின் பெயரைப் பற்றி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது சினிமா, அரசியல் மற்றும் சமூகபிரச்னைகள் பற்றி பேசி வரும் இவர் ஆரம்பகாலத்தில் திரையுலகிற்குள் வந்தது எப்படி என்பதை பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் தேவன் மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், மும்பையில் பாட்ஷா படத்திற்கான ஷுட்டிங்கிற்காக பத்து நாட்கள் நாங்கள் அங்கிருந்த ஹோட்டலில் தங்கியிருந்தோம், அப்போது ஒருநாள் ஷுட்டிங் முடிந்தவுடன், அனைவரும் ஹோட்டலை அடைந்த பின்னர், ரஜினி சார் டின்னருக்கு தன்னை அழைத்ததாா்.

நானோ, அவர் மிகப் பெரிய ஸ்டார், எல்லா ஸ்டார்களுமே இது போன்று சும்மா பேருக்கு கூப்பிடுவார்கள், அதற்காக நாம் சென்றுவிடுவதா என்று எண்ணி போகவில்லை, அதன் பின் ஹோட்டல் ஊழியர் வந்து என்னை ரஜினி சார் அழைப்பதாக போனில் கூறினார்.

அப்போது தான் தெரியவந்தது அவர் உண்மையாக அழைத்திருக்கிறார் என்று, இதனால் நான் அவருடைய அறைக்கு சென்று முதலில் மன்னிப்பு கேட்டேன், அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி, அவருடைய சொந்த பக்கங்கள் பற்றி கூறிய போது மிகவும் வேதனையுடன் நிர்மலா என்ற பெண்ணைப் பற்றி கூறினார்.

ரஜினி பெங்களூருவில் ஒரு சாதாரண கண்ட்ரக்டராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கும், இவருக்கும் இடையே ஒரு கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது, அந்த பெண் பேருந்தை விட்டு இறங்கும் போது தான் இந்த வாக்குவாதம் என்று கூறினார்.

அந்த பெண்ணின் பெயர் நிர்மலா, அவர் அப்போது மருத்துவருக்கு படித்து வந்தார். முதலில் இருவருக்கும் பிரச்னையில் ஆரம்பித்தாலும், அதன் பின் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

அதன் பின் இவர்களின் நட்பு, ஒரு கட்டத்தையும் அதையும் தாண்டி சென்றுள்ளது. ஆனால் இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை,

தொடர்ந்து இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், அப்போது ரஜினி நிர்மலாவிடம் நடித்து காட்டியுள்ளார். இதனால் அவரின் நடிப்பை பார்த்து நிர்மலா அசந்து போயுள்ளார்.

அடுத்த சில நாட்களில் சென்னையில் இருக்கும் அடையார் பிலிம் இன்ட்டியூட்டில் இருந்து ரஜினி வந்து சேரும் படி ஒரு அழைப்பு வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரஜினி இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

ஆனால் அவர் அதற்கு பதில் அனுப்பவில்லை, அதன் பின்னரே அவருக்கு இது நிர்மலாவின் வேலை என்று தெரியவர, அவர் நிர்மலாவிடம், அவரை செல்லமாக நிம்மியிடம் நீ ஏன் இதைப் பற்றி எல்லாம் கூறவில்லை என்று கேட்க, அதற்கு நிர்மலா நீ நன்றாக நடிக்கிறாய், உன்னை நான் சினிமா போஸ்டரில் பார்க்க வேண்டும், தியேட்டர்களில் உனக்கு கட் அவுட் வைப்பதை பார்க்க வேண்டும் என்று, அதனால் நீ போ என்று கூற, அப்போது ரஜினிக்கு ஆர்வமும் இல்லை, பணமும் இல்லை, அப்போது பணம் கொடுத்து நிர்மலா ரஜினியை சென்னைக்கு அனுப்பியுள்ளார்.

அதன் பின் வேலையை விட்டு சென்னை சென்ற ரஜினி அங்கு சில நாட்கள் தங்கியிருந்த போது, நிர்மலாவிடம் இருந்து தொடர்பை இழந்தார். இதனால் மிகுந்த வேதனையடைந்த அவர், உடனடியாக பெங்களூருக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவர் இல்லை, அவர் இருந்த வீடும் பூட்டியுள்ளது. இதனால் அருகில் இருந்தவர்களிடம் கேட்ட போது, அவர்கள் வீடு மாறி சென்றுவிட்டதாக கூற, அதை நினைத்து ரஜினி என்னை கட்டிப்பிடித்து அழுதார், நான் இன்று மிகப் பெரிய நடிகராக இருக்கலாம், இமயமலை,அமெரிக்கா எல்லாம் செல்லலாம், ஆனால் அவள் ஏன் என்னை பார்க்க வரவில்லை, நான் எல்லாமே அவர் சொன்னது போன்று சாதித்துவிட்டேன், அவள் பார்க்க வரவில்லை என்று கூறியதாக தேவன் கூறினார்.

ரஜினி தற்போது லதாவை கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் ரஜினியை நான் சமீபத்தில் சந்தித்த போது கூட, நீங்கள் நிர்மலாவை பார்த்தீர்களா என்று கேட்டேன், ஆனால் அவர் இல்லை என்றே சொன்னார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *