நடிகர் நெப்போலியனா இது? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்… தீயாய் பரவும் அழகிய குடும்ப புகைப்படம்

சினிமா

நடிகர் நெப்போலியனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இறுதியாக கிறிஸ்துமஸ் கூப்பன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் விரைவில் கதாநாயகனாக நடிப்பேன் என்று நடிகர் நெப்போலியன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர் நெப்போலியன் 1963ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி.

பாரதிராஜா இயக்கிய புதுநெல்லு புதுநாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதில் அவர் 60 வயது கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

தற்போது வயதாகி கொண்டிருக்கும் அவர் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது அவரின் நீண்ட நாள் ஆசை என்று கூட கூறியிருந்தார்.

நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

தற்போது நெப்போலியன் அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

ஏனெனில் அவருடைய மூத்த மகனுக்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால் கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். தற்போது தனுஷ் இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, படவாய்ப்புகள் குவிந்து வந்தாலும் குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் ஒரு சில படத்தில் மாத்திரமே நடிப்பதாக அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *