நடிகர்களை விமர்சித்த பிரபல பாலிவுட் நடிகை கங்கனா , காரணம் இது தானா

சினிமா

நாம் நாட்டில் அவ்வப்போது நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றால் அவர்களை விமர்ச்சிப்பது வழக்கம் தான்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா அவர்களிடம் பத்திரிகையாளர்கள், ’குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு சில பாலிவுட் நடிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தாலும் முன்னனி நடிகர்கள் யாரும் தங்களது கருத்துக்களை ஏன் இன்னும் கூறாமல் இருக்கிறார்கள்’ என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை கங்கனா, “குடியுரிமை சட்ட திருத்தும் குறித்து பாலிவுட் முன்னனி நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும், அவர்களுக்கு முதுகெலும்பே இல்லை என்று விமர்சித்து பேசியுள்ளார்”.

மேலும், “மக்களால் தான் தங்காள் உருவானோம் என்று அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால் அவர்கள் அந்த இடத்தில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள் ஆவார்கள். இன்ஸ்டாக்ராமில் பதிவிடுவது மட்டுமே அவர்களது வேலையில்லை மக்களுக்காக தங்களது கருத்தை முன் வந்து கூறவேண்டும்” என்று ஆவேசத்துடன் பேசினார் நடிகை கங்கனா.

தற்போது இவர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *