தொப்புளில் அழுக்கு சேர்வதால் இவ்வளவு ஆபத்தா..? இயற்கையாக சுத்தம் செய்வது எப்படி..

மருத்துவம்

 

 

குளியல் என்பது எம் அனைவருக்கும் அத்தியாவசியமானதொன்று. குளியலின் போதே எமது உடலில் உள்ள பெருமளவு அழுக்குகள் சுத்தம் செய்யப்படுகின்றது. என்னதான் குளியலில் ஈடுபட்டாலும் தொப்புள் பகுதியில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வதற்கு பலர் தவறி விடுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான விடயம்.

ஏனெனில் தொப்புள் பகுதியில் அழுக்குகள் சேர்வதால் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

தொப்புளில் அழுக்கு சேர்வதால் அப்படி என்ன நடக்கும் எனக் கேட்கின்றீர்களா? கட்டாயம் இதை படியுங்கள்.

01. குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்புகள், வியர்வை மற்றும் இறந்த செல்கள் போன்ற பல காரணங்களால் சுமார் 65 வகையிலான பக்டீரியாக்கள் தொப்புள்களில் வாழ்கின்றன.

02. பக்டீரியாக்களின் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

03. தொப்புளை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். அதுவும் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது குழந்தையையும் பாதிக்கும்.


04. தொப்புளில் தொற்று ஏற்பட்டிருந்தால்அரிப்புகள், துர்நாற்றம் மற்றும் வலி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

தொப்புள் பகுதியை சுத்தம் செய்வது எப்படி?

01. பஞ்சில் சிறிதளவு பேபி எண்ணெயில் அல்லது தண்ணீரில் நனைத்து தொப்புளை சுத்தம் செய்த பின்பும் மற்றொரு பஞ்சை பயன்படுத்தி தொப்புளை சுத்தமாக துடைக்க வேண்டும்.

02. மிதமான சூடுள்ள நீரில் சிறதளவு உப்பை சேர்த்து அந்த நீரில் பஞ்சை நனைத்து, தொப்புளை நன்றாக சுத்தம் செய்வதுடன், அந்த ஈரத்தன்மை போக்க மீண்டும் பஞ்சினால் துடைக்க வேண்டும்.


03. தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு செய்து அதை தொப்புளில் தடவி, கடிகாரமுள் திசையிலும், கடிகாரமுள்ளுக்கு எதிர் திசையிலும் மசாஜ் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு தொடர்ந்து செய்து வர தொப்புளில் உள்ள அழுக்குகள் சூரியனைக் கண்ட பனியைப் போல் மறையும். –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *