தூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா? அப்ப இத செய்யுங்க.

அழகுக் குறிப்புகள்

தூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா? அப்ப இத செய்யுங்க.

உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூலமே உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா? ஆம், நீங்கள் படிப்பது உண்மையே. ஆய்வாளர்கள், ஒருவரது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிப்பதற்கான சிறப்பான வழியாக தூக்கத்தைக் கூறுகிறார்கள். ஒருவர் தினமும் அதிகளவு தூக்கத்தை மேற்கொண்டாலே உடல் எடையைக் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், இக்கட்டுரையில் தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைக்க ஒருசில எளிய ட்ரிக்ஸ்களைப் பின்பற்றினாலே போதுமானது. சிலர் இரவு நேரத்தில் தூங்கும் முன் சிப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு, தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். ஆனால் சில ஆய்வில், ஆண்கள் இரவு தூங்கும் முன் 30 கிராம் புரோட்டீன் ஷக்கை குடிப்பதால், மறுநாள் காலையில் அவர்களது உடல் ஆற்றல் சிறப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது.

ஒருவர் புரோட்டீன் நிறைந்த உணவை இரவு நேரத்தில் உட்கொண்டால், அது இரவு நேரத்தில் தசைகளில் உள்ள காயங்களை சரிசெய்து புதுப்பிக்க உதவும். அதாவது ஒருவர் அதிகளவு தசைகளைக் கொண்டிருந்தால், ஓய்வு நேரத்தில் அதிகளவு கலோரிகள் எரிக்கப்படுமாம். சரி, இப்போது தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி என்று காண்போம்.

இருட்டான அறையில் உறங்கவும்

இரவு நேரத்தில் தூங்கும் போது, உறங்கும் அறையானது இருட்டாக வெளிச்சமின்றி இருக் கவேண்டும். இதனால் உடலில் மெலடோனின் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் எளிதில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம், கலோரிகளை எரிக்கும் ப்ரௌன் கொழுப்பு உற்பத்தி செய்யப்படும். ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால் உங்கள் படுக்கை அறையில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மதுவைக் குறைக்கவும்

இரவு நேரத்தில் தூங்கும் போது உடலானது ஓய்வு நிலையில் இருக்கும். இந்த காலத்தில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். இரவு நேரத்தில் தூங்கும் முன் மதுவைக் குடித்தால், உடலானது ஆல்கஹாலை வளர்சிதை மாற்றம் செய்யும் பணியில் ஈடுபடும்.

இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்கும் செயல்முறை பாதிக்கப்படும். இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் ஒயின் நல்லது தான். ஆனால் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே குடித்துவிடுங்கள்.

அளவான இரவு உணவு

இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் அதிகளவு உணவை உட்கொண்டால், உணவை செரிப்பதற்கு உடல் நீண்ட நேரம் செயல்பட வேண்டியிருக்கும். பொதுவாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூளையானது வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும்.

ஆனால் தாமதமாக உணவை உட்கொண்டால், வளர்ச்சி ஹார்மோன்களானது உணவுகளில் சேர்ந்து, எரிபொருளாவதற்கு பதிலாக கொழுப்புக்களாக தேங்கிவிடும். எனவே இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், குறைவாகவும், வேகமாகவும் சாப்பிடுங்கள்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்

மான்செஸ்டர் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம், உடலின் சாதாரண செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதால் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த நீல நிற வெளிச்சம் மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கும் மற்றும் மெட்டபாலிசத்தில் இடையூறை உண்டாக்கும். எனவே இரவு நேரத்தில் தூங்கும் முன் டிவி, மொபைல் போன்றவற்றை 1 மணிநேரத்திற்கு முன்பே அணைத்து, அவற்றைப் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

அறையை குளிர்ச்சியாக வைத்திருக்கவும்

ஒருவர் தூங்கும் அறை குளிர்ச்சியான வெப்பநிலையில் இருந்தால், கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும் என்பது தெரியுமா?

ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான அறையில் உறங்கியவர்களை விட, 60 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை கொண்ட அறையில் உறங்கியவர்களின் உடலில் 7 சதவீதம் அதிகமாக கலோரிகள் எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தூங்கும் அறை குளிர்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

பகல் வேளையில் சுறுசுறுப்பாக இருக்கவும்

தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால், அது உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் இரவு தூங்குவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே உடற்பயிற்சி செய்வதை நிறுத்துங்கள்.

ஏனெனில் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், உடல் ஓய்வு நிலைக்கு செல்லாமல், விழிந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும். எனவே இரவு நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற நினைத்தால், இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்த்து, பகல் நேரத்தில் செய்யுங்கள்.

மதிய உணவில் முழு தானியங்களை சேர்க்கவும்

தூக்கத்தின் மூலம் உடல் எடையைக் குறைப்பது எப்படி? மதிய வேளையில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்டுக்களை உண்பதன் மூலம், இரவு நேரத்தில நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

எப்படி? முழு தானியங்களில் இருந்து செரடோனின் பெறப்பட்டு, அது தூக்கத்தின் போது மெலடோனினாக மாற்றமடையும். எனவே முழு தானிய உணவுகளான பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானிய பிரட், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுங்கள்.

ஆடையின்றி உறங்கவும்

இரவில் தூங்கும் போது ஆடை அணியாமல் தூங்கினால் கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் என்பது தெரியுமா? இப்படி தூங்குவதால், உடலானது குளிர்ச்சியடைந்து, உடலில் நல்ல மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகரித்து, ஆற்றல் அதிகரித்து, அதிகப்படியாக கலோரிகள் எரிக்கப்படும்.

அதோடு இவ்வாறு தூங்குவதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. முக்கியமாக ஆண்கள் இவ்வாறு தூங்கினால், உடலில் காற்றோட்டம் சிறப்பாக இருந்து, விந்தணுவின் தரமும் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *