தீராத கடனை தீர்க்கும் பைரவ ரகசியமும் பரிகராமும்…!!

சினிமா

யாருக்கு கடன் இருக்கிறதோ அவர்கள் தமது நீண்டகாலமாக பயன்படுத்திய பனியன் அல்லது வேட்டியை துவைத்து காய வைத்தப்பின்னர், 10 செண்டிமீட்டர் நீளமும் 10 செண்டிமீட்டர் அகலமும் உடைய 16 சம சதுரத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
கறுப்பு நூல்கண்டு, மிளகும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது). ஒரு  சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணிக்குள் இந்த 16 சம சதுரத் துண்டுகளில் இரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு அதில்  ஒவ்வொன்றிலும் 27 மிளகுகளை வைத்து கறுப்பு நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு தேங்காய் உடைத்து, தேங்காயின் உள்பகுதியில் இந்த 27 மிளகுகளைக் கொண்ட கறுப்பு நூலால் கட்டப்பட்ட சிறுபொட்டலத்தை வைக்கவேண்டும். தேங்காயில் சுத்தமான நல்லெண்ணெயை ஊற்றி பைரவப் பெருமானின் சன்னிதியில், இந்த தேங்காய்த் துண்டுகளை  பைரவப்பெருமானின் முன்பாக வைக்க வேண்டும்.
பைரவப் பெருமானிடம் மனப்பூர்வமாக தனது கடன்கள் விரைவாக தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த இரண்டு தேங்காய்களிலும் இருக்கும் மிளகுப்பொட்டலத்தின் மீதும் தீபமேற்ற வேண்டும். இது போல தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகளுக்கு செய்ய வேண்டும்.
தீட்டு சமயங்களில் விட்டுவிட்டாவது 8 சனிக்கிழமை முடிக்க வேண்டும். எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் எவ்வளவு பெரிய கடன் தொகையாக இருந்தாலும் அவை தீர எதிர்பாராத உதவியை பைரவப் பெருமான் அருளுவார்.
குறிப்பு: கணவனுக்காக மனைவி செய்யலாம். ஆனால் தந்தைக்காக மகளும், சகோதரனுக்காக சகோதரியும் செய்யக்கூடாது. இதற்கு சமையலறையில் இருக்கும் மிளகைப் பயன்படுத்தக்கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *