திருமணம் நடந்த சில நாட்களில் நடந்த பஞ்சாயத்து… சோகத்தில் டி.ஆர். குடும்பம் !

சினிமா

பிரபல நடிகர், டைரக்டர் டி ராஜேந்தர் மகன் குறளரசன். நடிகர் சிம்புவின் தம்பியான இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற திருமணத்திற்காக டி. ராஜேந்தர் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், ரஜினிகாந்த், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.

அதன் பிறகு சமீபத்தில் தான் குறளரசன் அபீல அஹ்மத் திருமணம் சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் முக்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறி அதன் பிறகே திருமணம் நடைபெற சம்மதம் கிடைத்தது. திருமணம் முடிந்ததும் சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குறளரசன் சென்னையில் உள்ள போட் ஹவுசில் உள்ள ஏரியாவில் தனிக்குடித்தனம் சென்று விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த  டி.ஆர். குடும்பத்தினர் மிகுந்த வருத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *