திருமணமான பெண்களின் மீதே ஆசை.. ஜோதிடர் சொன்ன வார்த்தை: சரவணபவன் ராஜகோபால் சிக்கியது எப்படி?

சினிமா

தமிழகத்தில் ஜீவஜோதி வழக்கில் சரவணன் பவன் ஹோட்டல் உரிமையாளர் சிக்கியது எப்படி என்பதை முன்னாள் பொலிஸ் அதிகாரி வரதராஜன் கூறியுள்ளார்.

சரவணன்பவன் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தவரின் மகளான ஜீவாஜோதி மீது ஆசைப்பட்டு, தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பவர் தான் சரவணன்பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், அவர் எப்படி இந்த சம்பவத்தில் சிக்கினார் என்பதை வரதராஜன் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், இந்த வழக்கு இப்படி தண்டை கிடைக்கும் அளவிற்கு வர முக்கியகாரணமே இறந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா தான், என்று தொடர்ந்த அவர், இந்த கொலை குற்றம் நடந்தது 2001-ஆம் ஆண்டு.

ராஜாகோபாலுக்கும், பொலிசாருக்கும் அதிக நெருக்கம் உண்டு, அவர் தன் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் காவல்நிலையங்களுக்கு மாதம் 100 உணவு பொட்டலங்களை இலவசமாக கொடுப்பார், அதைத் தவிர டீ, காபி, உயர் அதிகாரிகளுக்கு தனி கவனிப்பு என்று இருப்பார்.

ராஜாகோபால் எப்படிப்பட்ட ஆள் என்றால், அவருக்கு திருமணமான பெண்கள், அதுவும் மிகவும் அழகாக இருந்தால் அவர்களை அடைய நினைப்பார், அவர் ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்களின் மனைவி, பிள்ளைகள் யாராக இருந்தாலும் அப்படி தான்.

இவர் முதல் மனைவியை தான் சட்டப்படி திருமணம் செய்து கொண்டாரே தவிர, அவரின் இரண்டாவது மனைவி கிரித்திகா, அவர் திருமணம் ஆனவர், அவரின் கணவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தான், கிரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.

இப்படி வேறொருவரின் மனைவியை காசு கொடுத்து வாங்கிய ராஜாகோபால், ஜீவா ஜோதியை தன்னுடைய ஹோட்டல் மேனேஜ்மேண்டில் பார்கிறார், அவர் பிரின்ஸ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

கிரித்திகாவின் மீது இருந்த இவரின் கண் அப்படியே ஜீவ ஜோதி மீது விழுகிறது. உடனே அவரை அடைய நினைக்கும் அவர், அவரின் கணவரிடம் சென்று, கிரித்தாகவின் கணவருக்கு எப்படி குறிப்பிட்ட தொகை கொடுத்தாரோ, அதே போன்று அவரிடமும் பணம் கொடுக்கிறார்.

ஆனால் பிரின்ஸ் அது எல்லாம் கிடையாது என்று கூற, ஜீவ ஜோதியும் மறக்க, ஜோதிடத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்ட, ராஜகோபால் ஜோதிடரிடம் கேட்கும் போது, இந்த பெண்ணை திருமணம் செய்தால், புகழின் உச்சத்திற்கு சென்றுவிடுவீர்கள் என்று கூறுகிறார்.

அதன் பின்னர் இருவரையும் கடத்துவற்காக பிளான் செய்த ராஜாகோபால், தன்னிடம் வேலை பார்த்த டேனியல் என்பவரிடம் அந்த வேலையை கொடுக்கிறார். இருவரையும் கடத்தி சென்ற டேனியல், பிரின்ஸ் தன்னுடைய வேலை பார்த்தவர் என்பதால், அனுதாபத்தில் உன்னை கடத்தி கொலை செய்துவிட்டு, ஜீவஜோதியை மட்டும் வைக்க சொல்லியிருக்கின்றனர்.

நீ தப்பிவிடு என்று அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் சில மாதம் கழித்து தன் மனைவியை பார்க்க வந்த பிரின்ஸ், நடந்தவற்றை கூறி, உடனே ராஜகோபாலிடம் சென்று, தங்களை வாழவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜகோபால், இவனை கொலை செய்துவிட்டதாக கூறினார்களே, அப்புறம் எப்படி என்று இன்னொரு திட்டம் தீட்டி அவரை கொலை செய்து தீர்த்துகட்டி விடுகிறார்.

இந்த விவகாரம் காவல்நிலையத்திற்கு வர, நீதிமன்ற விசாரணையில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

அதன் பின் ராஜகோபால், ஜீவஜோதியின் வீட்டிற்கு சென்று மிரட்டுகிறார். அதன் பின் கொலை வழக்குடன், மிரட்டல் வழக்கு என இரண்டும் சேர்ந்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது.

கொலை வழக்கிற்கு இரண்டே தண்டனை தான் ஒன்று ஆயுள் தண்டனை, இல்லையென்றால் மரண தண்டனை, ஆனால் அந்த நீதிமன்றமோ 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க, அதிலிருந்தும் தப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு செல்ல, அந்த நீதிமன்றம் வழக்கின் விசாரணைக்கு 5 வருடம் எடுத்துக் கொண்டு, 2009-ல் ஆயுள்தண்டனை விதிக்கிறது.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு செல்ல, அந்த வழக்கு விசாரணைக்கு 10 வருடங்கள் எடுத்துக் கொள்ள இப்போது அதே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் இந்த விவாகரத்தில் ஜெயலிதா அவர்களே ஜீவஜோதியை நேரில் அழைத்து, அதைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு, அதன் பின் இதில் எந்த ஒரு அரசியில் தலையீடு இருக்க கூடாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இதன் காரணமாகவே அரசியல் தலைவர்கள் யாரும் இதில் ஈடுபட முடியவில்லை, அதுமட்டுமின்றி ஜோதிடர் சொன்னார், அவர் சொன்னார் என்று யாரும் எந்த செயலிலும் இறங்கிவிடாதீர்கள்.

அந்த ஜோதிடர் சொன்னதும் பொய் இப்போது கடைசியில் ராஜகோபால் எங்கிருக்கிறார் என்று தெரிகிறா தானே, இதை இப்போது இருக்கும் இளைஞர்கள் நன்றாக தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *