திருமணமாகி இரண்டே நாளில் நடிகை போட்ட அதிரடி பதிவு!

சினிமா

தனுஷுடன் மயக்கம் என்ன, சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபத்யாய். இவருக்கு தமிழில் பின்னர் பட வாய்ப்புகள் அமையவில்லை.

தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வந்த இவர் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு தன் நண்பர் ஜோ லாங்கெல்லான கடந்த டிசம்பர் 17 ல் திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவில் குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ட்விட்டரில் அவர் இந்த மசோதாவை மறைமுகமாக சாடியுள்ளார்.

இதில் அவர் அமெரிக்காவுக்கு 3 வயதிலேயே சென்றுவிட்டேன். 90 களில் குடியுரிமை பெற்றுவிட்டேன். இந்தியாவில் நான் பிறந்திருந்தாலும் அமெரிக்காவும் எனக்கு வீடு தான்.

இரு கலாச்சலாரத்துடன் நான் வளர்ந்துள்ளதால் அதிர்ஷ்டசாலி. அதனால் இரண்டு உலகிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. நான் படங்களில் நடித்த 5 வருடங்கள் மட்டுமே இந்தியாவில் தங்கியிருந்தேன். வெளிநாட்டவரை திருமணம் செய்தது குறித்த கருத்துக்களை பார்க்கும் போது சிறு தடையாக இருக்கிறது. ஆனால் நான் ஒன்றாக இருக்கிறேன்.

திறந்த மனதோடு, மக்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்ததெடுப்பதில் நம்மை நாமே தடை செய்வதில் எந்த பயனும் இல்லை. வேற்று கலாச்சாரத்தில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

என்னையும் என் கலாச்சாரத்தை விரும்புவருடன் இருக்க என அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *