திருப்பதி போண்டா

ஆரோக்கிய சமையல்

இந்த போண்டாவை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் சமயத்துல தவறவிட்டதில்ல.

தேவையான பொருட்கள்

உளுந்து மாவு 1 கப் ( விழுதாக அரைத்தது)
அரிசி மாவு 1 கப் ( விழுதாக அரைத்தது)
பச்சை மிளகாய் விழுது 4 மேஜைக்கரண்டி
மைதா மாவு இரண்டு கைபிடி
கோதுமை மாவு ஒரு கைப்பிடி
பெரிய வெங்காயம் 1 கப் ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
சோடா உப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி ( பொடியாக நறுக்கியது)
மரசெக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

1. ஒரு அகன்ற கனமான பாத்திரத்தில் மரசெக்கு கடலெண்ணய் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

2. தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வடை போடும் பதத்திற்கு கரைத்து கொள்ளவும் .

3. இப்பொழுது வடைச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டை வடிவில் சிறு சிறு உருண்டைகளாக எலுமிச்சம்பழ அளவில் போடவும்.

4. பிறகு அடுப்பை சிறுதீயிலேயே வைத்து போண்டாவை வேகவிடவும் பொன்னிறமாக வந்த உடன் எடுத்து விடவும்.

5. இந்த போண்டாவை ஆந்திர மாநிலத்தில் துணுக்கு போண்டா என்று கூறி கெட்டியான தேங்காய் சட்னியுடன் அங்குள்ள உணவகங்களில் பரிமாறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *