தினமும் துளசி நீர் குடியுங்கள்…ஏன் தெரியுமா? இதை படியுங்கள்…!!

உடல் ஆரோக்கியம்

அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் துளசி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கையின் படைப்பில் இதுவும் சிறந்த மருந்தாகும் எனினும் துளசியைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புக்கள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனுடன் ஒட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.

சரி இப்போ துளசி நீர் செய்வது எப்படி என்று பார்ப்போம்…முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும். இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்களையும் அடியோடு விரட்டி விடும் அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும்.

தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர நம்மை எந்த நோய்களும் அணுகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *