தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார்: பிரபல நடிகையின் கணவர் பேட்டி

சினிமா

மும்பை: தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார் என்று நடிகை அனிதா பற்றி அவரின் கணவர் ரோஹித் ரெட்டி தெரிவித்துள்ளார். வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அனிதா ஹசநந்தனி. சாமுராய், சுக்ரன், நாயகன், மஹாராஜா ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

நாகினி 3 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிதா. இந்நிலையில் அவர் தனது கணவர் ரோஹித் ரெட்டியுடன் சேர்ந்து நாச் பால்யே 9 டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் அனிதா சூனியக்காரியாகவும், கணவர் அவரால் பாதிக்கப்படுபவராகவும் நடித்து, நடனமாடி நடுவர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றார்கள்.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. அதற்கு அந்த அளவுக்கு வரவேற்பு இருக்காது என்று உங்களுக்கு தெரியாதா என நாச் பால்யே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மனிஷ் பால் அனிதாவிடம் கேட்டார். அதற்கு அனிதாவின் கணவர் கூறியதாவது, ஏ ஹைன் மொஹப்பதைன் தொலைக்காட்சி சீரியலில் அனிதா ஷகுன் என்கிற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரத்தில் நடித்த முதல் 6 மாதங்கள் தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார்.

நான் கெட்டவளாக நடிப்பதால் நிறைய நெகட்டிவ் கமெண்ட் வருகிறது, சமூக வலைதளங்களில் தினமும் கலாய்க்கிறார்கள் என்று கூறி அழுவார். சில சமயம் அவருக்கு மிரட்டல் விடுத்து இமெயில்கள் கூட வந்துள்ளது என்றார். நாச் பால்யே நிகழ்ச்சியில் 5 முன்னாள் காதல் ஜோடிகள், 5 தற்போதைய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் அனிதாவுக்கு தான் அதிகம் சம்பளம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *