தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறியதால் சிறுவன் கொடூர கொலை!

சினிமா

 

சென்னையில் தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறியதால் 10 வயது சிறுவன் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறியதால் சிறுவன் கொடூர கொலை!

சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணமாகி கணவனை இழந்த, தன்னைவிட 3 வயது பெரிய பெண்ணான மஞ்சுளா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 10 வயதில், ரித்தேஷ் சாய் என்ற மகன் உண்டு. இவர் நேற்று மாலை ராமாபுரத்தில் உள்ள ஒருவீட்டில் இந்தி டியூசன் படிப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் டியூசன் செண்டரில் விசாரித்துள்ளார். அப்போழுது  நாகராஜ் என்பவர் சிறுவனை கூட்டி சென்றது தெரியவந்துள்ளது.

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறியதால் சிறுவன் கொடூர கொலை!

இதனையடுத்து கார்த்திகேயன், நாகராஜ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தீவிரமாக தேடிய போலீசார், தலைமறைவாக இருந்த நாகராஜை கைது செய்து விரித்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கணவர் இறந்ததால் அவர் வகித்து வந்த மின் வாரிய உதவி பொறியாளர் பணி மஞ்சுளாவுக்கு கிடைத்தது. அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் இடைத்தரகர் நாகராஜ் என்பவருடன் மஞ்சுளாவுக்கு தகாத உறவும் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மஞ்சுளாவின் கணவர் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும் இருவரும் யாருக்கும் தெரியாமல் பழகி வந்துள்ளனர். அடிக்கடி நாகராஜும் சிறுவனை டியூசனிலிருந்து அழைத்து வந்துள்ளார்.

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் கூறியதால் சிறுவன் கொடூர கொலை!

இதனையடுத்து இருவருக்கும் இருக்கும் தொடர்பை பற்றி அறிந்த சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் கோபமான நாகராஜ் கார்த்திகேயனை பலி வாங்குவதற்காகவே கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாகராஜ் விசாரணையில் கூறுகையில், “மஞ்சுளாவிடம் நான் பழகியது கார்த்திகேயனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் குடும்ப நண்பர்களைப்போல என்னை நடத்தியவர்கள், மஞ்சுளாவுக்கும் எனக்கும் உள்ள நட்பு தெரியவந்த பிறகு, அந்த வீட்டில் நான் அவமானப்படுத்தப்பட்டேன். குறிப்பாக, கார்த்திக்கேயன் மீது எனக்கு கடும் கோபம் இருந்தது. அவரைப் பழிவாங்க, ரித்தேஸ் சாயைக் கடத்தினேன். சேலையூரில் நான் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவரை அழைத்துச்சென்றேன். மது குடித்த பிறகு, என் மனம் மாறியது. இதனால், இரும்பு ராடால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதன்பிறகும் ஆத்திரம் தீரவில்லை. இதனால், மதுபாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்தேன். போதை தெளிந்த பிறகுதான் பயம் வந்தது. ரித்தேஸ் சாயின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், வேலூருக்கு தப்பிச்சென்றேன். செல்போன் டவர்மூலம் சிக்கிக்கொண்டேன்” என்று போலீஸாரிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *