தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகள்!…, 8 Foods To Grow Beard

அழகுக் குறிப்புகள்

யாராவது ஒன்றை செய்தார்கள் என்றால் அதை ட்ரெண்டாக மாற்றி விடுவதே இன்றைய நெட்டிசன்களின் முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. படங்களில் வரும் வசனங்கள், பாட்டு, இசை, ஸ்டைல்… இப்படி எல்லாத்தையுமே ட்ரெண்ட் என்கிற பெயரில் மாற்றி அமைக்கும் வல்லமை நெட்டிசன்களுக்கு அதிக அளவில் உள்ளது.

அதே போல தான் நிவின் பாலி, விஜய் தேவரக்கோண்டா போன்றோர் தாடியுடன் படத்தில் நடிப்பதை அதிகமாக விரும்பி அதையே ட்ரெண்டாக மாற்றியும் வைத்தனர்.

இதே நிலை தான் சமீபத்தில் வெளியாகிய கே.ஜி.எப்ஃ படத்தின் யஷிற்கும் நடந்தது. ஆனால், பல ஆண்களுக்கு தாடி சீக்கிரமாக வளர முடியாமல் அந்நேரங்களில் தவித்ததும் உண்டு.

இந்த நிலையை மாற்றி அமைக்க சில வேதி பொருட்கள் கொண்ட கிரீம்கள் எக்காரணத்தை கொண்டும் உதவாது.

ஆனால், நாம் தினமும் சாப்பிட கூடிய சில உணவுகள் தாடியின் முடியை வேகமாக வளர வழி செய்யும்.

தாடியை சரசரவென வளர வைக்கும் 8 உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது தொடர்ந்து சாப்பிட்டால் உங்கள் காதலிக்கு பிடித்தது போன்ற ஸ்மார்ட்டான தாடி கிடைத்து விடும்.

முட்டை

தாடி முடியை சிறப்பாக வளர வைக்க முட்டை சிறந்த உணவாக இருக்கும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோனின் அளவு சீராக இருந்தாலே தாடி அழகாக வளரும்.

முட்டை சாப்பிட்டு வருவதால் இவை டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை அதிக அளவில் உற்பத்தி செய்து தாடி முடியை கிடக்கிடவென வளர செய்து விடும்.

ஆரஞ்ச்

வைட்டமின் சி இயற்கையிலே இந்த பழத்தில் அதிக அளவில் இருப்பதால் தாடியின் முடி வளர்ச்சி அதிகரிக்கும். தாடி வளராமல் அவதிப்படுவோருக்கு இந்த ஆரஞ்சு பழம் சிறந்த முறையில் உதவும்.

தினமும் ஆரஞ்சை சாப்பிட்டு வந்தாலே ஆண்கள் செழிப்பான தாடியுடன் காட்சி தருவீர்கள்.

உருளைக்கிழங்கு

சாப்பிட கூடிய உணவில் உருளைக்கிழங்கை சேர்த்து கொண்டால் அவை டெஸ்டோஸ்டெரோனின் உற்பத்தியை அதிகரித்து விடும்.

காரணம் இதிலுள்ள கார்ப்ஸ் தான். தினமும் கொஞ்சம் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாடியின் முடி சீக்கிரமாக வளரும்.

உலர் திராட்சைகள்

போரான் என்கிற முக்கிய மூல பொருள் உலர் திராட்சையில் அதிக அளவில் உள்ளது. இது தாடியின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆனால், இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலர் திராட்சை சாப்பிட்டு வரவதால் டெஸ்டோஸ்டெரோன் அளவு உயர்ந்து, தாடி நன்றாக வளரும்.

கம்பு

இதுவரை பலரும் கேள்விப்படாத ஒன்றுதான் இது. கம்பில் உள்ள க்ளுட்டன் என்கிற மூல பொருள் கூட தாடியின் வளர்ச்சி உதவுமாம்.

ஆதலால், அவ்வப்போது கம்பங்கூழ் போன்ற கம்பினால் செய்த உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். இது தடியின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆலிவ் எண்ணெய்

சமைக்கும் உணவில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கொண்டால் பல்வேறு உடலுக்கான நன்மைகள் கிடைக்கும்.

அதில் இதுவும் ஒன்று. ஆலிவ் எண்ணெய் தாடியின் முடியை கொழுகொழுவென வளர்க்கும் ஆற்றல் கொண்டது. இதை தாடியில் தடவியும் வரலாம்.

காளான்

எல்லாவித காளான் வகைகளும் உடலுக்கு நல்லதல்ல. அந்த வகையில் வெள்ளை கால்களை கொண்ட காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை குறைத்து டெஸ்டோஸ்டெரோனை அதிகரித்து விடும். இதனால் உங்களின் தாடி முடியும் சிறப்பாக வளரும்.

பிரேசிலின் நட்ஸ்

செலினியம் போன்ற தாதுக்கள் பிரேசிலின் நட்ஸில் அதிக அளவில் இருப்பதால் தாடியின் வளர்ச்சியை சீக்கிரமாக ஊக்குவிக்கும்.

தினமும் சிறிதளவு பிரேசிலியன் நட்ஸை சாப்பிட்டு வந்தால் தாடி நன்றாக வளரும்.

ப்ரோக்கோலி

அவ்வப்போது ப்ரோக்கோலி, காலிப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாடியின் முடி சிறப்பாக வளரும். அத்துடன் ஹார்மோன் உற்பத்தியும் சீராக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *