தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்!

மருத்துவம்

 

 

சென்னை மாங்காடு பகுதியில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி எரித்து கொலை செய்த குற்றவாளி தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கருணை அடிப்படையில் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால் நிச்சயம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கவே மாட்டோம். தூக்கு தண்டனை என்பதால் விசாரணைக்கு ஏற்கிறோம் என்று கூறியிருந்தது.

மேலும், இந்த மனு தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதுவரை தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மெளலிவாக்கம் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்த 22 வயதான தஷ்வந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு 6 வயதேயான ஹாசினி என்ற சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

பின்னர் சிறுமியை கொலை செய்து நகருக்கு வெளியே சென்று சடலத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் தஷ்வந்தை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி தனது தாய் சரளாவிடம் பணம் கேட்டு மிரட்டினார்.

அவர் மறுக்கவே தாயைக் கொலை செய்து விட்டு 25 பவுன் நகைகளுடன் மும்பைக்கு தப்பிச் சென்று தலைமறைவானார்.

இதையடுத்து தனிப்படை காவல்துறை மும்பை சென்று தஷ்வந்தை டிசம்பர் 6 ஆம் திகதி கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முடிவடைந்து, கடந்த பிப்ரவரி 19 ஆம் திகதி, தஷ்வந்த் மீதான குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், ஹாசினியைக் கடத்தியது, துன்புறுத்தியது, பாலியல் வன்கொடுமை செய்தது, சடலத்தை எரித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அதற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் தஷ்வந்துக்கு 36 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *