தனது மகள் பிறந்தநாளுக்கு உருக்கமாக வாழ்த்து கூறிய ஆர்னால்டு, என்ன சொன்னார் தெரியமா

சினிமா

ஹாலிவுட் திரையுலகில் பாடி பில்டிங் மூலம் கதாநாயகனாக ஆனவர் அர்னால்டு. அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது டர்மினேட்டர், டோடல் ரீகால், பிரெடேடர் போன்ற படங்களை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.

அர்னால்டுக்கு கேத்ரின் என்ற மகள் உள்ளார். அவருக்குநேற்று பிறந்தநாள் என்பதால் அர்னால்டு உருக்கமாக வாழ்த்து கூறியுள்ளார்.

தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அர்னால்டு.

அதில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் Katherine Schwarzenegger நீ என் இளவரசி! உங்கள் முழு வாழ்க்கையில் நீங்களே உங்களை வலுப்படுத்தி கொள்கிர்கள். நான் உங்களைப் பற்றி நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஐ லவ் யூ” என்று ஒரு தந்தையாக பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் அர்னால்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *