தனது பிறந்தநாளுக்கு கணவர் அஜித் கொடுத்த பரிசை பார்த்து கண்ணீர் விட்ட ஷாலினி – அப்படி என்ன பரிசு தெரியுமா

சினிமா

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் வந்தது.
இதற்காக அஜித் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். அதோடு ஷாலினிக்கு தெரியாமல் ஷாலினியின் பள்ளித்தோழிகளை இந்த விழாவிற்கு அஜித் வருமாறு அழைப்பு விடுக்க, அவர்களும் இந்த பார்ட்டிக்கு வந்ததுவிட்டனர். கடைசி வரை அவர்கள் வருவது தெரியாமல் இருந்த ஷாலினிக்கு தன்னுடைய தோழிகளை பார்த்ததும் பயங்கர சர்ப்ரைஸ் ஆகி ஆனந்த கண்ணீர் விட்டு விட்டாராம்.
நலம் விசாரிப்புகள் முடிந்த பிறகு பார்ட்டியும் நடைபெற்று முடிந்தது. மட்டுமின்றி ஷாலினியின் சிறிய வயது புகைப்படங்கள் எல்லாம் சேர்த்து ஒரு ஸ்லைட் ஷோ வீடியோவும் ஏற்பாடு செய்திருக்கிறார் தல.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *