தனது ஆசையை மகளிடம் மறைத்துவிட்டு படப்பிடிப்பிலேயே ம ரணித்த பிரபல நடிகை… தற்போது இவரது மகள் என்ன செய்கிறார் தெரியுமா?

சினிமா

தனது இயல்பான நடிப்பினால், அப்பாவியான பேச்சினாலும் நடிப்பில் கலக்கியவர் தான் நடிகை கல்பனா.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கல்பனாவின் சகோதரிகள் தான் நடிகை ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி..

பாக்கியராஜ் இயக்கத்தில் கல்பனா நடித்த சின்னவீடு படம் ஒட்டுமொத்த ஆண்களையும் மிகவும் கவர்ந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தனது கணவர் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக்கொள்பவராகவே நடித்திருப்பார்.

அதன் பின்பு சிந்து நதி பூ, சதிலீலாவதி போன்ற படங்களில் நடித்த கல்பனா 1998ம் ஆண்டு அணில்குமார் என்பரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீமயி என்ற குழந்தை நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக 2012ம் ஆண்டு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

பின்பு மகள் ஸ்ரீமயி உடன் வாழ்ந்த வந்த கல்பனா, கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அதன் பின்னர் ஸ்ரீமயி தனது சித்தியான நடிகை ஊர்வசியுடன் இருந்துவருகின்றார். விஸ்காம் மாணவியான இவர் தனது படிப்பினை முடிக்கும் முன்பே மலையாள சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனது மகளை நடிகையாக்கி அழகுபார்க்க வேண்டும் என்ற ஆசை கல்பனாவிற்கு இருந்துள்ளது. ஆனால் மகள் பேஷன் உடை போட்டியில் கூட கலந்துகொள்வதற்கு கூச்சப்படும் மகளிடம் தனது ஆசையினை கூறாமல் மறைத்துவிட்டாராம்.

ஆனால் கல்பனா தனது அம்மாவிடம் மட்டும் தனது ஆசையைக் கூறியுள்ளார். தற்போது கல்பனா இறந்த பின்பு ஸ்ரீமயிக்கு அம்மாவின் ஆசை தெரியவர தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்தவருக்கு தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

என்னதான் தனது குடும்பம் நடிப்புத்துறையில் இருந்தாலும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருந்தால் மட்டுமே எந்த வேலையிலும் வெற்றிபெற முடியும் என்ற தீர்மானத்துடன் களமிறங்குகிறார் ஸ்ரீமயி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *